Aran Sei

‘நேபாளத்தில் யோகா உருவாகும்போது இந்தியா என்கிற நாடே இல்லை’ – பிரதமர் கே.பி. சர்மா

யோகா உருவானது நேபாளத்தில்தான் என்றும் யோகா நடைமுறைக்கு வந்த காலத்தில் இந்தியா என்ற நாடே இல்லை என்றும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 21), சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தனது இல்லமான பலுவதாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.பி. சர்மா ஓலி பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அப்போது, “யோகா உருவானது நேபாளத்தில்தான். இந்தியாவில் இல்லை. யோகா நடைமுறைக்கு வந்த காலத்தில் இந்தியா என்ற நாடே இல்லை. அக்காலத்தில் இந்தியா பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அப்போது, இந்தியா ஒரு கண்டம் அல்லது துணைக் கண்டத்தை போன்றது.” என்று அவர் கூறியுள்ளார்.

‘யோகா பயிற்சி வழியே உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும்’ – ஐஐடி ஆய்வில் தகவல்

மேலும், “உண்மையான அயோத்தி நேபாளத்தின் மேற்கு பிர்குஞ்சினில் உள்ள தோரி என்ற நகரத்தில் அமைந்திருந்தாலும், ராமர் தங்கள் நாட்டில்தான் பிறந்தார் என்று இந்தியா கூறிவருகிறது. இப்படி தொடர்ச்சியாக கூறிவருவதால், தெய்வமான சீதை இந்தியாவின் இளவரசர் ராமரை மணந்திருக்கிறார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், உண்மையில் அயோத்தி மேற்கு பிர்குஞ்சில்தான் அமைந்துள்ளது.” என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா உறுதியாக தெரிவித்துள்ளார்.

Source; ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்