Aran Sei

புரட்சியாளர் சந்திரசேகர் ஆசாத்தை கொலை செய்ய, நேரு சதி செய்தார் – ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கருத்து

சுதந்திர போராட்ட வீரர் சந்திர சேகர் ஆசாத்தை கொலை செய்ய, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சதி செய்தார் என, ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினரும் அம்மாநில பாஜக பொதுச் செயலாளருமான மதன் திலாவர் கூறியுள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காரங்கிரஸ் கட்சி, திலாவருக்கு மனநிலை பாதித்துவிட்டது என கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமண்ட் மாவடத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, செய்தியாளர்களைச் சந்தித்த மதன் திலாவர், “சுதந்திர போராட்ட வீரரும், புரட்சியாளருமான சந்திர சேகர் ஆசாத்திற்கு புரட்சி நடவடிக்கைகளுக்காக 1,200 ரூபாய் தேவையிருந்ததால், பண்டிட் ஜவஹர்லால் நேருவை சந்தித்ததார். ஆசாத் கேட்ட தொகையை கொடுப்பதாக உறுதியளித்த நேரு, அவரை ஒரு பூங்காவில் காத்திருக்க சொன்னார். பின்னர் நேரு செய்தது என்னவென்றால், நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆசாத் பூங்காவில் அமர்ந்திருக்கிறார் என ஆங்கிலேயருக்குத் தகவல் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: குற்றம்சுமத்தியவரை திருமணம் செய்வீர்களா? – ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

”ஆசாத் மீது ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அவர் பதிலடி கொடுத்தார். ஆனால் ஆங்கிலேயர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை அறிந்த ஆசாத், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்” எனத் திலாவர் தெரிவித்தாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராம்கஞ்ச்மண்டி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் மதன் திலாவர், ஆசாத் மரணத்திற்கு நேரு காரணம் என்று தெரிவித்த குற்றச்சாட்டில் உறுதியாக இருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் –யிடம் தெரிவித்துள்ளார்.

”காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த நேரு, பிரதமராக விரும்பியது தான் ஆசாத் மரணத்திற்கு காரணம். ஆசாத்தை கொலை செய்ய நேரு சதித்திட்டம் தீட்டியதாகவும், அவரது மரணத்திற்கு நேரு தான் காரணம் என்றும் நான் வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறேன்” எனத் திலாவர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

முகலாயர்களை வீழ்த்த வேண்டும் – தேஜஸ்வி சூர்யா மீண்டும் சர்ச்சை பேச்சு

”புத்தகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள்” மூலம் இந்த உண்மைய தெரிந்து கொண்டதாக திலாவர் தெரிவித்துள்ளார்.

திலாவரின் கருத்திற்கு  கண்டனம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், ராஜ்சமண்ட இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளருமான புஷ்பேந்திர பரத்வாஜ், ”திலாவரின் வரலாறு அறிவு பலவீனமானதோடு உண்மைக்கு அப்பாற்பட்டது. வயதானதால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் திலாவர், செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது இது போன்ற கருத்துக்களை தெரிவித்துவருகிறார்” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திலாவர், போராட்டக்களத்தில் உலர் பழங்கள், சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சொகுசாக இருக்கும் விவசாயிகள், பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தவே போராட்டத்தை மேற்கொள்கின்றனர் எனக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்