Aran Sei

நீட் விலக்கு மசோதா : தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பிய ஆளுநர்

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளதாக ராஜ்பவனில் இருந்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்பவனில் இருந்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “நீட் தொடர்பாக ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவம் படித்த சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களைப் பற்றி அந்த குழு ஆய்வு செய்தது. நீட் தேர்வானது குறிப்பாகக் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்று அந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.”

“2022 பிப்ரவரி 01 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை சபாநாயகரிடம் நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான விரிவான காரணங்களைக் கூறிய பின் அந்த மசோதாவை அரசுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக” செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீட் தேர்வானது ஏழை மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து, சமூக நீதியை மேம்படுத்தும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக” ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்