Aran Sei

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப மீட்டெடுக்காத வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன் – மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி

Image Credits: The Print

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப மீட்டெடுக்கப்படாத வரை தேர்தலில் போட்டியிட போவதில்லையென மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கான காலம் முடிவுக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

‘உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்: காஷ்மீரை சிறையாக்கியதோடு குழந்தைகளையும் அரசு குறிவைக்கிறதென மெஹபூபா முப்தி கண்டனம்

கடந்த ஆகஸ்ட் 5, 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், அங்கு வரவிருக்கும் தேர்தல்குறித்து தெரிவித்துள்ள மெஹபூபா முப்தி, இந்த யூனியன் பிரதேசங்கள்கீழ் தேர்தலில் நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால், எனது கட்சி பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து முடிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

மேலும், “அதிகாரிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாகச் சிறையில் அடைக்க ப்படுகின்றனர். ட்விட்டரில் கருத்துக்களை தெரிவிப்பவர்களும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதற்குப் பெயர் தான் ஜனநாயகமா?” என்றும் மெஹபூபா முப்தி கேள்வியெழுப்பியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஜம்மு காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வகையில் ஒன்றிய அரசின் எல்லா நடவடிக்கைகளும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்