Aran Sei

‘இந்திய நீதித்துறை காலனிய காலத்திலிருந்து விழித்துக்கொள்ள வேண்டும்’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து

ந்திய நீதித்துறை விசாரணை என்பது நீண்டக்காலம் எடுக்கக்கூடியதாகவும் செலவுமிக்கதாகவும் ஆங்கிலத்தில் நடைபெறக்கூடியதாகவும்  உள்ளது என சராசரி இந்தியர்கள் உணர்வதாக  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

மேலும், தீர்ப்பு என்பது மிகவும் நீளமானதாகவோ அல்லது நுட்பம் மிகுந்த வார்த்தைகளைக் கொண்டதாகவோ அல்லது  மேற்க்கூறிய இரண்டுமாகவும்  உள்ளதாக நீதிபதி என்.வி.ரமணா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்கள்  காலனித்துவ முட்டாள்தனங்களிருந்து விழித்துக்கொண்டு,  இந்திய சமுகத்தின் நடைமுறை யதார்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்படவேண்டிய நேரமிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,”தற்போதைய தேவை என்பது நமது சட்ட நடைமுறைகளை இந்தியமயமாக்குவது தான்” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், ஏழைகள் மற்றும் கிராமப்புறத்தினர்  நீதிமன்றங்கள் அல்லது  நீதிபதிகளை பார்த்து அச்சம் கொள்ளாத வகையில்  எளிதாக  நீதி கிடைக்குமாறு    விதிகளும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நீதிமன்றத்தின் வேலை மற்றும் பாணி இந்தியாவின் சிக்கல்களுடன் சரியாக பொருந்தி  அமையவில்லை,” என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

Source:THE HINDU

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்