ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை அதிகரிக்க வேண்டிய தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் அவையில் கொரனோ ஊரடங்கு காலக்கட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய மத்திய அரசின் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பை 2 ஆண்டு அதிகரிக்க அரசிடம் திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யூ.ஜி.சி கடிதம் – உத்தரவை மதிக்க மத்திய கல்வி நிறுவனங்கள்
மேலும், கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கு காலக்கட்டத்தில் நடந்த குடிமை பணி தேர்வின் போதே தேர்வாளர்கள் வசதிக்காக அரசு போதிய வசதிகளைச் செய்திருந்தது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவயில் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் அரசின் பணிகளில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவயில் பதிலளித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.