Aran Sei

வேலைவாய்ப்பின்மையை போக்க பாடுபட வேண்டும் – தமிழ்நாடு ஆர்எஸ்எஸ் தீர்மானம்

காலத்திற்கு ஏற்றவாறு தேவைக்குப் பொருத்தமான புதிய தொழில்நுட்பங்களையும் மென் திறன்களையும் சமுதாயத்தில் புகுத்திட வேண்டும். புதிய உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்(வட தமிழகம்) அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்எஸ்எஸ்(வட தமிழகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இயற்கை வளம், மனித ஆற்றல், தொழில் முனைவு திறமை எல்லாம் நிறைந்துள்ள நம் நாட்டை விவசாய உற்பத்தி, சேவைத் துறைகளிலும் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா  ஏற்படுத்திய வேலை இழப்பு, வாழ்வாதாரம் பாதிப்புக்கிடையில் முளைத்த புதிய வேலைவாய்ப்புகள் சில பிரிவினர் ஆதாயம் அடைந்துள்ளனர். அதேபோல நவீன சாதனங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புச் சவாலை எதிர்கொள்ள முழு சமுதாயமும் இணைய வேண்டும்

ஊரக மக்களின் பணி, முறைசாரா துறையில் வேலைவாய்ப்பு, மகளிருக்கு வேலைவாய்ப்பு என்று ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மகளிர் பங்கேற்கும் இவற்றுக்கு அதிக ஊக்கம் தர வேண்டும்.

சிறு தொழில் நடத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். அதே போல பெண்கள், கிராம மக்கள், தொலை தூர பழங்குடி மக்கள் பகுதியிலும் சுய தொழில் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

கல்வியாளர்கள் தொழில்துறையினர் சமுதாய பெரியவர்கள் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் வேலைவாய்ப்புக்கு திறன்மிக்க பங்களிப்பு வழங்க வேண்டும்.

வேகமாக மாறிவரும் சர்வதேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சவாலை எதிர்கொள்ள அதற்கு ஏற்ற வழிகளை சமுதாயம் கண்டறிய வேண்டும் என்று ர்எஸ்எஸ்(வட தமிழகம்) அமைப்பின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்