Aran Sei

நீட் தேர்வு: தமிழ்நாடு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டதா? – உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் வி. கடார்கி

ன்றிய, மாநில அரசுகளின் முரண்பட்ட நலன்களை சமன்செய்வதில் இந்திய கூட்டாட்சி பல கடினமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியை அலுவலக மொழியாக முன்னிறுத்துவது, நிதி வளங்களை பங்கிட்டுக் தருவது இன்னும் எண்ணற்ற பிற பிரச்சினைகள் பெரும்பாலும் அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வை உலுக்கி உள்ளன. அண்மையில் தமிழ்நாடு அரசு தேசிய தேர்வு முகமை இளநிலை மருத்துவக் கல்வி வகுப்பில் சேர நடத்தும் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது, ஒன்றிய, மாநில அரசுகளின் நெகிழ்வான உறவிற்கு புதிய சவாலை விடுத்துள்ளது.

நீதிபதி ஏ.கே‌. ராஜன் குழுவின் அறிக்கை, புள்ளிவிவர ரீதியாக  பின்தங்கிய மாணவர்கள், அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில அரசு கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது நீட் தேர்வின் பாகுபாடுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்துவதை  அம்பலப்படுத்தி உள்ளது.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

தற்போதைய அரசியலமைப்பு  நெருக்கடியின் ஊற்றுக்கண் சுகாதாரத்துறையின் முக்கியத்துவத்திலும், மருத்துவப் படிப்பில் இடப்பற்றாக்குறை இருப்பதுமே ஆகும். ஒவ்வொரு இடத்திற்கும் பல நூற்றுக்கணக்கானவர்கள்  விண்ணப்பிப்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வடிவத்தில் மதிப்பிடுவது பிற தேர்வுகளில் இருப்பது போலவே இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இது பின்தங்கிய மாணவர்களுக்கு மிகக் கடினமான பணியாகும்.

நீட் தேர்வை எழுதும் மாணவர்களின், மருத்துவத் தொழில் மீதான மனப்பான்மை, சுகாதாரச் சேவைகளில் அர்ப்பணிப்பு அல்லது உடற்கூறியலில்  உள்ள அறிவு ஆகியவை பரிசோதிக்கப்படுவதில்லை. மாறாக, ஏற்கனவே பள்ளிக் கல்வியில் பயின்ற இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்குள்ள திறமையை பரிசோதிகாகத்தான்  நீட் தேர்வும் நடத்தப் படுகிறது. இது அமெரிக்காவில் நடத்தப்பட்டும் SAT தேர்வுகளின் வழியில் மாணவர்களின் பாடங்களில் 180 கேள்விகள் கொடுக்கப்பட்டு, மாணவர்களின் நரம்பை முறிக்கும் எதிர்மறை மதிப்பெண்களுடன் நடத்தப்படுகிறது. குறிப்பிட்டவற்றுக்குள் வந்தால், நீட்டுக்கு எதிராக ஒன்றுக்கு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள மூன்று கேள்விகள் விரிவாக முன் வைக்கப்படுகின்றன. அரசு உதவி பெறாத மற்றும் சிறுபான்மையோர் பள்ளிகளை நடத்துபவர்கள் மாணவர்களைத் தேர்வு செய்வதில் தன்னாட்சியும், சுதந்திரமும் இல்லை என்று புகார் கூறுகின்றனர். கிராமப்புற மாணவர்களோ நீட் பாடத்திட்டம், CBSC, ICSC, IB அல்லது IGSC பாடத்திட்டத்தை ஒட்டியே வடிவமைக்கப்படுவதால் பொருத்தமற்று இருப்பதாகவும், கேள்விகள் மிகவும் தந்திரமாக இருப்பதாகவும் புகார் கூறுவதுடன் அதில் எதிர்மறை மதிப்பெண்கள் என்ற தண்டனையும் சேர்ந்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

’பெண்ணுரிமை என்பது ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான போர்’ – பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா பாசின் மறைந்தார்

நீட் தேர்வு 1956 ம் ஆண்டின் இந்திய மருத்துவ கழகச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பலதரப்பட்ட தேர்வுமுறைகளை தவிர்ப்பதற்காக 2010 ல் இந்திய மருத்துவக் குழுவால் துவக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. தனியார் மற்றும் அரசு தொழில்முறை கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையை வடிவமைத்த உன்னிக்கிருஷ்னன் வழக்கை மீறி TMA. பாய் மற்றும் இஸ்லாமிக் அகாடமி வழக்குகள் இருந்தன.

2014 ல் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்திருந்தது. எனினும் இந்தத் தீர்ப்பு MCI க்கு எதிரான கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வழக்கில் திரும்பப் பெறப்பட்டு வழக்கு அரசியலமைப்பு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கிடையில், மத்தியப் பிரதேச அரசின் பொது நுழைவுத் தேர்வு தங்கள் நிர்வாகங்கள் தங்கள் சொந்தத் தேர்வு முறையில் அல்லது வழிமுறையில் மாணவர்களைத் தேர்வு செய்வது தங்கள் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படையில் தொடுக்கப்பட்ட மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

‘இராமே ஆண்டாலும்.. இராவணன் ஆண்டாலும்’ – : காளை + விவசாயம் + அப்பாவி கிராமம் + ஊழல் அரசியல்வாதிகள் – ஆய்வே இல்லாத ஒரே பார்முலா!  

உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, குறித்த பட்டியல் I ன் 66 வது குறிப்பை சுட்டிக்காட்டி. ஒன்றிய அரசின் பங்கையும்,  பட்டியல் எண் III ன் 25 வது குறிப்பைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் பங்கையும் வரையறுத்தது. இருப்பினும் இது பிரிவு 254(2) ன் கீழ் விலக்கு அளிப்பது பற்றியக் கேள்விக்கு வழிவகுத்தது. பல் மருத்துவமனை வழக்கில்  ஒன்றிய, மாநில அரசுகளின் பங்கு குறித்த இந்த வரையறை, பின்னர் சங்கல்ப் அறக்கட்டளை வழக்கில் அமர்வினால் விளக்கப்பட்டது.  அவசர சட்ட காலத்தில் 1976ல் அரசியலமைப்பின் 42 வந்து திருத்தச் சட்டத்தின் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் மறு சமன் செய்யப்பட்டது. பட்டியல் II குறிப்பு 11 ல் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி நீக்கப்பட்டு  பட்டியல் III, குறிப்பு 25 ன் படி ஒத்திசைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இத்தகைய அரசியலமைச் சட்டத் திருத்தம் அடிப்படை கட்டமைப்பை அழித்து விட்டதா என்பது வாதத்திற்குரிய ஒன்று.

1935 ம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் ஏழாவது அட்டவணை குறிப்பு 18 ன் படி கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியம். அரசு மற்றும் தனியார்  கல்லூரிகளுக்கு அரசு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் நடைமுறையை நிறுத்தி வைத்ததால்  அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு III ன் படியோ அல்லது சட்டமன்றத் தகுதிகள் அடிப்படையிலோ அது அரசியலமைப்பு நலிவால் பாதிக்கப்படாது என்ற மாடர்ன் பல் மருத்துவமனை வழக்கில் தரப்பட்ட  அமர்வின் தீர்ப்பால் உற்சாகமடைந்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு தனி வழக்கு  விசாரணை துவங்கியது. “நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புக்கான  நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்”  என்று கோரிய ரிட் மனு மீது அமர்வு நீதிமன்றம் முந்தைய அனைத்து உத்தரவுகளையும் மீறி, நீட் தேர்வு நடத்த உத்தரவிட்டது.

நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்

மனுதாரர் முன்மொழிய, மருத்துவ கழகம் ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அதனை வெளிப்படுத்தியது போல் இது இருந்தது. இதனைத் தொடர்ந்து 2020 ல் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட்டின் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடியை உறுதி செய்தது. அரசியலமைப்பின் பகுதி III ன்படி கோரப்பட்ட அடிப்படை உரிமைகள் பற்றி எழுப்பிய கேள்வியைத் திரும்பப் பெற்றது. சட்டபூர்வமான தொடு கல் மீதான அரசியலபைப்புத் தீர்ப்பு தற்போது முறையாக முடிவுக்கு வந்துள்ளது.

நீட் 2017 ல் புத்துயிர் பெற்றது. மேலும் 1956 சட்டவிதிகளின் ஏற்பாட்டிலிருந்து தனது சட்டபூர்வத்தன்மையைப் பெற்றது. எனினும், நாடாளுமன்றம் 1956 ம் ஆண்டு சட்டத்தை நீக்கிவிட்டு, 2019 ல் அந்த இடத்தில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை இயற்றிய போது பிரிவு 14(1) ன் படி “இந்த சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவ நிறுவனங்களின் இளங்கலை மற்றும் முதுகலை அதிசிறப்பு மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு சீரான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தலாம்.” என நீட் ஒரு குறிப்பிடத்தக்க ஏற்பாட்டைப் பெற்றது.

கொரோனா தடுப்பில் சாதித்துவிட்டோமா ? – பிரதமர் மோடியின் உரைக்கு ரவிக்குமார் எம்.பி. எதிர்வினை

நாடு முழுமைக்கும் அல்லது நாட்டின் ஒரு பகுதிக்கு நீட் தேர்வை கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்றும்  கூட்டாட்சி சட்டமன்றமாக நாடாளுமன்றம் செயல்பட அரசியலமைப்பு ரீதியாக தகுதி உடையது என ஏழாவது அட்டவணைப் பட்டியல் III ல் 25 வது குறிப்பு கூறுகிறது. அந்த 25 வது குறிப்பு,” தொழில்நுட்பக் கல்வி , மருத்துவக்கல்வி மற்றும் பல்கலை கழகங்கள் உள்ளிட்ட கல்வி பட்டியல் I ன் 63,64,65,66 ஆகிய குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டது; தொழிற்கல்வி மற்றும்  தொழிலாளர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சி,” என்று கூறுகிறது.

நீட் என்பது  7வது அட்டவணை பட்டியல் I ன் 66 வது குறிப்புடன் தொடர்புடையது அல்ல.  66வது குறிப்பு,” உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நிறுவனங்களில் தர நிலைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் தீர்மானித்தல்,” என்பது பற்றியும்,” மத்திய பிரதேசத்தின் பொது நுழைவுத் தேர்வு பற்றிய விடயத்தை கையாளும் போது, அரசியலமைப்பு அமர்வு மாடர்ன் பல் மருத்துவமனை வழக்கை குறிப்பாக சுட்டிக்காட்டி உள்ளது” இருப்பினும் அது தேர்வுகள் நடத்துவதை உட்படுத்ததாது இன்ன பிற. மேலும் அத்தகைய நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை, அல்லது அந்த உயர்கல்வி  நிறுவனங்களில்  கட்டணங்களை பரிந்துரைப்பது  இன்னபிற,” என்று கூறுகிறது.

சூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு – பூவுலகின் நண்பர்கள்

மேற்கூறிய அரசியலமைப்பு ரீதியான நிலையில் 1976 ம் ஆண்டின் 42 வது திருத்தத்திற்கு முன் நாடாளுமன்றம் மற்றும் ஒன்றிய அரசு மற்றும் மாநில சட்டமன்றங்கள் இரண்டும் தகுதித் தேர்வு நடத்த சம உரிமைப் பெற்றுள்ளன. எனினும் பிரிவு 254(2) ன் கீழ் விலங்குக் கோரும் மாநில அரசின் சட்டத்தை குடியரசு தலைவர் அங்கீகரிக்கும் வரை, நாடாளுமன்றத்தின் 2019 ம் ஆண்டு  நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் 14 வது பிரிவின் படி உள்ள நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும்.

தேசிய அளவில் ஒற்றை சாளரத் தேர்வை நடத்துவது 2020 ம் ஆண்டின் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வழக்கில் கூறப்பட்டது போல மாணவர்கள் வலுக்கட்டாயமாக பல தேர்வுகளை எழுதி வேண்டியிருப்பதை நீக்கி விடுகிறது அது நன்மைதான். இருந்தாலும், நீதிபதி ராஜன் குழு அறிக்கையில் நீட்டில் சமத்துவமின்மைக்கான வலுவான விடயம் இருப்பதை வெளிப்படுத்துகிறது. உச்சநீதிமன்றம் இந்த அறிக்கையின் நல்ல பலன்களைப் பெற்றிருந்தால் அது நீட் தேர்வில் சமத்துவத்தை  இடையில் வைத்து தைத்திருக்கும்.

அறிக்கையில் உள்ள சமத்துவமின்மை பற்றிய சில குறிப்புகள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் மேற்கோளாக காட்டப்பட்டிருந்தது. “வீட்டுக்கு முந்தைய 2016-17 ல் கிராமப்புற மாணவர்களின் விழுக்காடு 65.17 லிருந்து 2020-21 ல் 49.91 ஆக குறைந்து விட்டது. தமிழ்வழியில் படித்த மாணவர்களின் விழுக்காடும் 2016-17 ல் 14.88 % ஆக இருந்தது 2020-21 ல் 1.99 % மாகக் குறைந்து விட்டது”.இதைப்போலவே, மாநில அரசு பாடதிட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம் பெறுவதும் 2016-17 ல் 65.66 விழுக்காட்டிலிருந்து 2020-21ல் 48.22 விழுக்காடாக குறைந்து விட்டது. அதேசமயம் சிபிஎஸ்சி மாணவர்களின் எண்ணிக்கை 0.39% லிருந்து 24.91% ஆக நீட் அறிமுகமாகிய ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்விக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 34 லிருந்து நீட்டிற்குப் பின் வெறும் மூன்றாக குறைந்தது மட்டுமல்ல 2017-18 ல் ஒரு அரசு பள்ளி மாணவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவில்லை.

அண்ணா ஏந்திய அறிவுச் சுடர் – ரவிக்குமார்

” தமிழ்நாட்டில் நீட் வந்தபிறகு முதல் தலைமுறை பட்டதாரிகள் இடம் பெறுவதும் 24.9%லிருந்து 13.6%ஆகவும், ஆண்டு வருமானம் 2.5 லட்சமாக உள்ள  பெற்றோர்களின் பிள்ளைகள்  விழுக்காடு நீட்டிற்கு முன்  47.42% ஆக இருந்தது நீட்டிற்குப் பின் 30.6% ஆக கீழிறங்கி விட்டது.

நீட்டிற்கு முன் 87.5% நடப்பு ஆண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தார்கள். ஆனால் அது 2020-21 ல் 28.5% ஆக குறைந்துவிட்ட நிலையில் பல முறை எழுதிய 71.4% பேர் மருத்துவக் கல்லூரி இடங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். மாணவர்கள் ஆண்டிற்கு ஒரு லட்சத்தில் இருந்து 4.5 லட்சம் வரை  நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செலவு செய்கிறார்கள் என அறிக்கைக் கூறியுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்,  பிரிவு 254 (2)  ன் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஒதுக்கப்பட்டால் அது ஒரு நெருக்கடியான அரசியல் கேள்வியாக மாறும். ஒன்றிய அரசு விலக்குக் கோரும் முன்மொழிவிற்கு  ஒப்புதல் தர வேண்டும் அல்லது நீட்டை மாற்றி அமைக்க வேண்டும்.

நினைவிடமா பூங்காவா – ஜாலியன் வாலாபாக்கில் வலதுசாரி கருத்தியலைத் திட்டமிட்டு புகுத்துகிறதா பாஜக?

இதே போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் விலக்கு கோரும் முன்மொழிவுகள் விரைவில் குடியரசு தலைவரை அடையலாம். இருப்பினும், பிரிவு 254(2) ன் கீழ் நாட்டின் உயர்மட்டத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்த எந்த வழிகாட்டுதல்களும் இல்லை.

அமைச்சரவையால் அறிவுரைப் பெறும் குடியரசுத் தலைவர் நீதிபதி ராஜன் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சமத்துவமின்மையை மறந்து விட முடியாது. “அதிகார பரவலின் ஒரு வடிவமாகக் கூட்டாட்சி ஜனநாயக கட்டமைப்பு செயல்படுகிறது”  எனில் மாநில சட்டத்திற்கு முன்னுரிமை அவசியம்.

பட்டியல் III ல் உள்ள ஒத்திசைவு விடயங்களில் பொது நலனில் அக்கறை கொண்டால், தனது பதவி முடிந்த போது அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி லூயிஸ் ப்ராண்டைஸ் நினைவு படுத்தியது போல, மாநில அரசுகளின் பரிசோதனைகள் ஆய்வகச் சோதனைகளாகக் கருதப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1976 அவசர நிலைக் காலத்தில் 42 வது திருத்தச் சட்டத்தின்படிதான், பட்டியல் I ன் 11 வது குறிப்பின் ஒரு பகுதியாக, பட்டியல் III ன் 25 வது குறிப்பின் படி மருத்துவக் கல்வி மாநில அரசுகள் பட்டியலிலிலிருந்து கைப்பற்றப்பட்டது என்பதை குடியரசுத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு சுதந்திரத்திற்கு முந்தைய ஏகாதிபத்திய அரசு எதேச்சதிகாரத்தைப் நடைமுறைப்படுத்தியது போல அன்றி ஒத்துழைப்பு உணர்வைத் தூண்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநாயகர் என்னும் இந்து தேசிய அடையாளம் – வரலாற்றில் ஒரு பயணம்

இந்த நிலையில், குடியரசு தலைவர் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை தனது சுய விருப்பத்தின் படி ஒப்புதல் அளிக்கலாம் அல்லது மறுக்கலாம். அவர் என்ன செய்வார் என்பதை  உண்மையில் நாம் முன்னரே அனுமானிக்க முடியாது. ஒரு வேளை அவர் நிராகரித்தால், ஒன்றிய அரசு நீட் வடிவமைப்பை திருத்துவது குறித்து பரிசீலனை செய்து எளிமையாக்கலாம் அல்லது மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 10%அளவிற்கு மதிப்பெண்களை வழங்கலாம். இது முன்னேறிய மற்றும் பின்தங்கிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அல்லது வசதி படைத்த மற்றும் வசதியற்ற மாணவர்களுக்கிடையே சமநிலையை ஏற்படுத்த ஒரு அறிந்த வழிமுறை. வேற்றுமைகளுடன் பன்முகத் தன்மைக் கொண்ட ஒரு சமூகத்தில் ஒரே அளவுகோல் எல்லாவற்றிற்கும் பொருந்தாது.

(www.indialegallive.com இணையதளத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் வி.கடார்கி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்