Aran Sei

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு மட்டும்தான் அதிகாரமென்றால் சட்டமன்றம் எதற்காக? – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேள்வி

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் 2 வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி 55 நாட்கள் கடந்து விட்ட நிலையில் ஆளுநரும் குடியரசுத்தலைவரும் மட்டும்தான் முடிவு எடுப்பார்கள் என்றால் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் எதற்குஎன்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக ஆளுநருக்கான பொது தகவல் அதிகாரிக்கு  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பியுள்ள கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 55 நாட்கள் கடந்துவிட்டது. இது தொடர்பாக எவ்வித பதிலும் இதுவரை வரவில்லை.

செவிலியர்களுக்கான பாடத்திட்டம்: “அழகு குறைவான பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை உதவுகிறது” – பகுதியை நீக்க சிவசேனா கோரிக்கை

ஒரு சட்ட மசோதா இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அவர் அதை பரிசீலனையில் வைத்துக் கொள்வதற்கோ அல்லது எவ்வித முடிவும் எடுக்காமல் தன் வசம் வைத்துக் கொண்டு காலம் தாழ்த்துவதற்கோ இந்திய அரசமைப்புச் சட்டம் இடம் தரவில்லை. தமிழக ஆளுநரின் இந்த செயல்பாடு மிகவும் கவலை தரக்கூடியது.

லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதிலிருந்து விடுபட விரும்புகிறார்கள், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்கள். இத்தகைய சூழலில் தமிழக சட்டமன்றம் 2 வது முறையாக நிறைவேற்றியுள்ள தீர்மானத்தையும் கிடப்பில் வைத்துக் கொண்டால் எப்படி?

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 818 செவிலியர்கள் பணிநீக்கம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

ஆளுநருக்கும் குடியரசுத் தலைவரும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய மக்கள் பிரதிநிதி அவைகள் எதற்காக?  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் எதற்காக?

தமிழக ஆளுநர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாநில சட்டமன்றம் இரண்டாவது முறையாக ஏகோபித்து நிறைவேற்றிய தீர்மானத்தை கிடப்பில் வைத்திருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

அவருடைய இந்த செயல்பாடு ஜனநாயக நடைமுறைகளை சீர் குலைத்து விடும் என்பதோடு ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் தகர்த்துவிடக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

எனவே, லட்சக்கணக்கான மாணவர்களின் உணர்வுகளையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தன் வசமுள்ள இந்த சட்ட மசோதாவை உடனே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் அனுப்ப வேண்டும். என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை- தமிழ்நாடு அமைப்பு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

****************************                 *******************************                *********************

வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடு ரத்து குறித்து வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்