கடந்த மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள 24விழுக்காடு ரோஹிங்கிய அகதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்முவின் ஹிரா நகர் பகுதியில், கடந்த மார்ச் 6 லிருந்து 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கிய அகதிகள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 218 மாதிரிகளில் 53 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த பகுதியின் மருத்துவ அலுவலர், மருத்துவர் ஸ்வாமி, முகாமில் உள்ளவர்களுக்குத் துரித ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பிறகு சிலரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா
மேலும், “53 பேருக்குக் கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் முகாம்களிலேயே தனிமைப் ப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள தடுப்பு முகாமில் உள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கான தலைவர் அஹ்மத், “வயதில் மூத்தவர்களையே அவர்கள் இந்த முகாமில் அடைத்துள்ளனர், எங்களுக்குத் தெரியும் இந்த சிறையில் நாங்கள் மிகவும் நெருக்கமாக வசித்து வருகிறோம், பின் எவ்வாறு தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க முடியும். எனவே மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளதாக தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.