Aran Sei

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

டந்த வாரத்தில், டெல்லியில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது உண்மையான எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது என்று தனது ஆய்வில் கண்டறிந்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

டெல்லி நகரின் உள்ளாட்சி அமைப்புகளின் கீழுள்ள சுடுகாடுகள் மற்றும் ஏழு சுடுகாட்டு மைதானங்களில் மேற்கொண்ட ஆய்வுகளை  நடத்தப்பட்டது. இதில், குறைந்தது 1,150 இறப்புகள் அதிகாரப்பூர்வமான கொரோனா தொற்று இறப்புகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்டிடிவி கண்டறிந்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் கீழ் இயங்கும் 26 சுடுகாடுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24 ஆம் தேதி வரை கொரோனாவால் உயிரிழந்த 3,096 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் – தகனம் செய்ய இடம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

ஆனால், இதே காலகட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்று டெல்லி அரசால் வெளியிடப்பட்ட எண்ணிக்கையானது 1,938 என்று உள்ளது. இதன் வழியாக, டெல்லியில் 1,158 கொரோனா இறப்புகள் கணக்கில் சேர்க்கபடாமல் போயிருக்கலாம் என்பதையே இது குறிக்கிறது.

காசிப்பூர் சுடுகாட்டில் பணிபுரியும் அனுஜ் பன்சால், “மருத்துவமனைகளில் இருந்து உடல்களைக் கொண்டு வருபவர்கள் ஆம்புலன்ஸில் வருகிறார்கள். மற்றவர்கள் வீட்டிலிருந்து உடல்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்களின் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்தால் சுவாசக் கோளாறு என்று இருக்கும். நாங்கள் அவர்களின் இறப்புக்கான காரணத்தில் கொரோனாவால் இறந்தார் அல்லது சாதாரணமாக இறந்தார் என்று எழுதுவோம். மருத்துவமனைகளில் மரணம் ஏற்பட்டிருந்தால், அது கொரோனா இறப்பு என்று எங்களுக்குத் தெரியும். அதுவே, வீட்டில் மரணித்திருந்தால், அதன் காரணம் எங்களுக்குத் தெரியாது. ஆகவே, நாங்கள் அதை ‘சாதாரணமான இறப்பு’ என்று பதிவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்