Aran Sei

சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம் –  20 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக சுவிஸ் சென்ட்ரல் பேங்க் தகவல்

ந்தியாவை தளமாக கொண்ட கிளைகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட சுவிஸ் வங்கிகளில் இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் இருப்பு தொகை ரூ. 20,700 கோடிக்கு (225 கோடி சுவிஸ் பிராங்குகள்) அதிகமாக உயர்ந்திருப்பதாக சுவிஸ் சென்ரல் வங்கி தெரிவித்துள்ளது.

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

2019 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 6,625 (89.9 கோடி சுவிஸ் பிராங்குகள்) கோடியாக இருந்த இந்தியர்களின் நிதி, 2020 ஆம் ஆண்டு இறுதியில் ரூ. 20, 700 கோடிக்கும் (225 கோடி சுவிஸ் பிராங்குகள்) அதிகமாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் சென்ரல் வங்கி தெரிவித்துள்ளது.

‘நிழல்களைக் கொல்லும் நடுப்பகல்’ – ஆதாரம் இல்லாததால் உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

2006 ஆம் ஆண்டு 650 கோடி சுவிஸ் பிராங்குகளாக இருந்த இந்தியர்களின் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்த நிலையில், 13 ஆண்டுகளாக இல்லாத அளவில் உச்சத்தை அடைந்திருப்பதாக வங்கி தெரிவித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் நிதி முதலீடு குறைந்து இருக்கும் வேளையில், இந்தியர்களின் நிதி அதிகரித்திருப்பதாக சுவிஸ் சென்ரல் வங்கி கூறியுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்