அல்லோபதி மருத்துவம் குறித்தும், மருத்துவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாபா ராம்தேவ் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால்,அவர் மீது மானநஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள அந்த ஆறு பக்க நோட்டீசில், பாபா ராம்தேவ் 15 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் 1000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அந்த நோட்டீஸ்சை அனுப்பிய உத்தரகண்ட் மாநில செயலாளர் அஜய் கன்னா, அல்லோபதி மருத்துவர் குறித்து பேசிய பாபா ராம்தேவின் கருத்து இந்தச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கிட்டத்தட்ட 2000 மருத்துவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதென்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
‘கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் அரசியல் சதி நடக்கிறது’ – பாபா ராம்தேவ்
மேலும், பாபா ராம்தேவ் இந்திய மருத்துவ சங்கத்திடம் மன்னிப்பு கோரவில்லை என்றால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 பிரிவின் கீழ், வழக்கு தொடரப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, பாபா ராம்தேவ் தயாரித்துள்ள ‘கோரோனில்’ மருந்தை, கொரோனாவை தடுக்க சிறந்த மருந்து என்று விளம்பரப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் அனுப்பிட நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.