Aran Sei

கோவாக்சின், கோவிஷீல்ட் சான்றிதழ்களை ஏற்காவிட்டால் ஐரோப்பிய பயணிகளுக்கும் தனிமைப்படுத்தல் கட்டாயம் – ஒன்றிய அரசு அறிவிப்பு

ரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் இந்தியர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்காமல் அவர்களை தனிமைப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 உறுப்பு நாடுகளைச் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக் கிரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அதன் உறுப்பு நாடுகளால் அனுமதியளிக்கப்பட்ட தடுப்பூசிகளின் சான்றிதழ் மட்டுமே ஏற்கப்படும், இதை தவிர மற்ற நாடுகளின் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களின் சான்றிதழ் ஏற்கப்படாது. மேலும், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஃபைசர், பயோஎன்டெக் மாடர்னா, வேக்ஸ்ஜெர்வியா (அஸ்டராஜென்கா) மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளித்துள்ளது. இது தவிர மற்ற தடுப்பூசிகளின் சான்றிதழ் ஏற்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அஸ்டராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்ட் செலுத்தியிருந்தாலும் ஏற்க முடியாது, ஐரோப்பிய ஒன்றியத்தால் அனுமதியளிக்கப்பட்டுள்ள வேக்ஸ்ஜெர்வியா  செலுத்தி இருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம்.

டெல்லி கலவரத்துடன் தொடர்புடைய கொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

இந்நிலையில், அஸ்டராஜென்காவின் கோவிஷீல்ட் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்குத் தனிமைப்படுத்தல் இருந்து விலக்கு வழங்குமாறு கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அதார் பூனாவாலா, ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரி ஜோஸப் பேராலுடன் பேச்சுவார்த்தை நடப்பட்டுள்ளதாக ஐரோப்பாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தடுப்பூசி சான்றிதழ் ஏற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனுமதியளிப்பது தொடர்பாகவும், அங்கீகரி்ப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. தொடர்ந்து பேச்சு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

கொரோனா தொடர்புடைய சிக்கல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் – கொரோனா இறப்பு என சான்றளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே, இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்காமல் இந்தியர்களை தனிமைப்படுத்தினால், ஐரோப்பாவில் இருந்து  வரும் பயணிகளின் சான்றிதழ் ஏற்கப்படாமல், அவர்களை கட்டாயத் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவிற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், ”இந்தியாவில் இருந்து ஏழை நாடுகளில் இருந்து வரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட பயணிகளை ஏற்காமல் தனிமைப்படுத்துவது சமத்துவமின்மை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்