Aran Sei

பாலியல் புகார் அளித்த விமானப்படை அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்த விவகாரம் – கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிக்கு உச்சநீதிமன்றத்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பிறப்புறுப்பில் இரண்டு விரல்களை விட்டுச் சோதனை செய்யும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பாக முறையான விசாரணை நடத்தை தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு விமானப் படைத்தளபதியை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படைத் தளபதிக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், “பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவருக்கு தடை செய்யப்பட்ட இரண்டு விரல் பரிசோதனையை இந்திய விமானப்படை மருத்துவர்கள் மேற்கொண்டதை அறிந்து தேசிய மகளிர் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளது. மருத்துவர்களின் இந்த செயலுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதுடன், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை மற்றும் கௌரவத்தை மீறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளித்த விமானப்படை அதிகாரி – புகாரைத் திரும்பப்பெற நிர்வாகம் மிரட்டியதாக குற்றச்சாட்டு

2014 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள வழிகாட்டுதல்களில், விரல் பரிசோதனை அறிவியல் பூர்வமற்றது என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இந்திய விமானப்படை மருத்துவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விமானப்படை தளபதியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் பெயரில், கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி குற்றம்சாப்பட்ட நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்