Aran Sei

கொரோனா ஊரடங்கிற்குப் பின் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகள் : தேசிய மகளிர் ஆணைய புள்ளிவிவரம்

credits : the indian express

பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் (என்சிடபிள்யூ) அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை (23,722) கடந்த ஆறு ஆண்டுகளை விட அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வன்முறைகளில் நான்கில் ஒரு பங்கு குடும்ப வன்முறைகள எனவும் தரவுகள் கூறியுள்ளன.

என்சிடபிள்யூவில் மொத்தமாக பதிவு செய்ய செய்யப்பட்டுள்ள 23,722 புகார்களில் உத்தர பிரதேசத்தில் இருந்து 11,872 புகார்களும், டெல்லியில் இருந்து 2,635 புகார்களும், ஹரியானாவில் இருந்து 1266 புகார்களும் மகாராஷ்ட்ராவிலிருந்து இருந்து 1,188 புகார்களும் பதியப்பட்டுள்ளன.

ஆசிட் வீச்சு : பாதிக்கப்படும் பெண்களை கண்டுகொள்ளாத அரசு – தேசிய மகளிர் ஆணையம்

இந்நிலையில் 5294 புகார்கள், குடும்பங்களில் நடக்கும் வன்முறைக்கு எதிராக என்சிடபிள்யூவில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு மொத்தம் 33,906 புகார்கள் வந்ததாக என்.சி.டபிள்யூ தரவுகள் தெரிவிக்கிறன. அதன் பின்னர் படிப்படியாக குறைந்த வந்த புகார்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஆசிட் வீச்சு : பாதிக்கப்படும் பெண்களை கண்டுகொள்ளாத அரசு – தேசிய மகளிர் ஆணையம்

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை ஏற்பட்டதுதான் குடும்ப வன்முறை அதிகரித்ததற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹத்ராஸ் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்

 

கடந்த மார்ச் மாதம் குடும்ப வன்முறைக்கு எதிராக அதிகளவிலான புகார்கள் என்சிடபிள்யூவில் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வந்த மாதங்களில் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது ஜூலை மாதத்தில் 660 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதம் தேசபக்தி பெயரால் பெண்கள் உரிமை மறுப்பு – போலந்தில் பரவும் போராட்டம்

”2020-ம் ஆண்டு குடும்பங்களில் நிலவிய பொருளாதார பாதுகாப்பின்மை, மன அழுத்தம், பதட்டம், பணப் பற்றாக்குறை கவலைகள் ஆகியன குடும்ப வன்முறை அதிகரித்ததற்கான காரணமாக இருக்கலாம்” என தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பதிலடி கொடுக்காதது தான் துன்புறுத்தலுக்கு காரணம் – உச்சநீதிமன்ற அமர்வு

மேலும், ”வீடு என்பது பெண்களின் இணையர்களின் அலுவலகமாகவும் குழந்தைகளின் பள்ளியாகவும், கல்லூரியாகவும் மாறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், பெண்கள் ஒரே சமயத்தில் குடும்ப வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் என பலதரப்பட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனவே கடந்த 2020-ம் ஆண்டு முன்னேப்போதும் நிலவி வந்த ஒரு புதிய வகையான சூழலைப் புரிந்துக் கொண்டு பெண்கள் வாழ பழகியதே மிகப் பெரிய சவால்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

இது குறித்து பேசிய பெண்கள் உரிமை ஆர்வலரான ஷமினா ஷபிக், “துரதிர்ஷ்டவசமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிப்பது தன்னுடைய உரிமை என்று நினைக்கிறான், மற்றொரு நபரின் வாழ்க்கையை நான் கட்டுப்படுத்துகிறேன் என்ற உணர்வு அவனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க்கை துணையை துன்புறுத்துவது கொடூரமான வன்முறை என்பதை சுவற்றில் எழுத வேண்டும்” என்று கூறியுள்ளதாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்