Aran Sei

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மீது மீ டூ புகார்- பதவி விலகக்கோரும் தேசியப் பெண்கள் ஆணையம்

ஞ்சாப் மாநில முதலமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள  சரண்ஜித் சிங் சன்னி பதவி விலக வேண்டுமென தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கோரியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், மீ டூ  [#MeToo] குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள ஒருவர் பஞ்சாப் மாநில முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது ‘அவமானகரமானது”  என்று தெரிவித்துள்ளார்.

‘இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகிறது என்பது கற்பனை’- ஆர்.டி.ஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

மேலும், “இது போன்ற ஒருவர் பஞ்சாப் மாநில முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது அவமானகரமானது, கண்டிக்கத்தக்கது. ஐஏஎஸ் அதிகாரி சந்தித்த அதே தொல்லையைப்  போன்று, வேறொரு பெண்ணுக்கு நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. சன்னி  முதலமைச்சர்  பதவியிலிருந்து  விலக வேண்டும்” என்றும்  கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில பெண்கள் ஆணையம் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட போதும், பஞ்சாப் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்றும் தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணை அமைப்புகளைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பாஜக பயன்படுத்துகிறது – சிவசேனா கட்சி குற்றச்சாட்டு

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு முறையற்ற  குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில்  மீட் டூ  புகார் எழுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைக் குறித்து  அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அம்மாநில தலைமை செயலருக்கு பஞ்சாப் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

SOURCE:THE INDIAN EXPRESS  

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்