Aran Sei

தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2020-ல் தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 18 விழுக்காடு அதிகரித்துள்ளது. மறுபுறம், நில உரிமையாளர்களின் தற்கொலைகள் சிறிது குறைந்துள்ளன.

கடந்த ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான வளர்ச்சிக் கொண்ட துறையாக விவசாயத் துறையும் இருந்தது. பொதுமுடக்கத்தின்போது, மற்ற துறைகளில் வளர்ச்சியின்மை இருந்தபோதும். நல்ல பருவமழையின் காரணமாக விவசாயத்துறை தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்து வந்தது.

ஆனாலும், பிஎம் கிசான் போன்ற திட்டங்களால் பயனடையாத நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், பொதுமுடக்கத்தின்போது அதிக அளவு துயரங்களை எதிர்கொண்டிருக்கலாம். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில், அதிகரித்து வரும் விவசாய சமூகத்தினரின் தற்கொலைகளுக்கு காரணங்கள் என எதுவும் பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக, 2020 ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,677 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2019-ல் தற்கொலை செய்துக்கொண்ட 10,281 பேரை விட அதிகம். இந்த 10,677 என்ற எண்ணிக்கை என்பது, நாட்டில் நடந்த மொத்த தற்கொலைகளில் 7 விழுக்காடாகும்.

தற்கொலைகளை செய்துக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறையில் பணி செய்து வருமானம் ஈட்டுபவர்கள். 2020 ஆம் ஆண்டில், விவசாயத் தொழிலாளர்களில் 5,098 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டு, தற்கொலை செய்துக்கொண்ட 4,324 பேரில் இருந்து 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் தற்கொலைகள் 5,129 லிருந்து 4,940 ஆக, அதாவது 3.7 விழுக்காடாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2019ஆம் ஆண்டு ஆறு நிலமுள்ள விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு, 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்