Aran Sei

ஆர்எஸ்எஸ் தலைவரின் புத்தக வெளியீட்டு விழா – அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் பங்கேற்க என்சிபியூஎல் உத்தரவு

ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்கத் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அனைத்துப் பணியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என உருது மொழி ஊக்குவிப்பிற்கான தேசிய கவுன்சில் (என்.சி.பி.யூ.எல்) உத்தரவிட்டுள்ளது.

மோகன் பகத் எழுதியுள்ள ’முஸ்தாக்பில் கா பாரத்’ புத்தகத்தின்  உருது பதிப்பு வெளியிடுட்டு விழாவில் கலந்து கொள்ள பணியாளர்க்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள தவறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்ச் 31 ஆம் தேதி மத்திய உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை லோதி சாலையில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் நடைபெறும் புத்தக விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

Photo Credit : The Wire

சுற்றறிக்கை அனுப்பட்டதை உறுதி செய்த என்.சி.பி.யூ.எல் இயக்குனர் அகமது, ”பங்கேற்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடுவது என்பது அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கு விளக்கம் கேட்கவே தவிர, பணியிடை நீக்கம் செய்ய அல்ல. மேலும், நிகழ்ச்சி அலுவலக நேரம் முடிந்த பிறகு நடக்கிறது என்பதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்