Aran Sei

‘ராஜஸ்தான் திருமண பதிவு மசோதா குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும்’ – குழந்தை உரிமைகள் ஆணையம்

குழந்தைகள் மற்றும் சட்டம் நலனுக்கேற்ப சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசு இயற்றிய திருமண பதிவு (திருத்த) மசோதா குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக்  கெஹ்லாட்டிற்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கடிதம் எழுதியுள்ளது

குழந்தை திருமணம் நடைபெற்ற பிறகு ஒரே இடத்தில் 30 நாட்களுக்கு அதிகமாக தங்கியிருக்கும் பட்சத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த திருமண பதிவு அலுவலர் வழியாக திருமணத்தைப் பதிவு செய்யும் வகையில் திருமண பதிவு (திருத்த) மசோதா 2021-யை ராஜஸ்தான் அரசு அண்மையில் இயற்றியது.

குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம் – ராஜஸ்தான் அரசு புதிய சட்ட திருத்தம்

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்  கெஹ்லாட்டிற்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், “இந்த திருத்த மசோதா வழியாக சிறார்களின் உடல், உளவியல், சமூக நிலை மற்றும் கல்வி ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் மற்றும் சட்டம் நலனுக்கேற்ப சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ராஜஸ்தான் அரசை கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

“21 வயது பூர்த்தியடையாத மணமகனுக்கும் 18 வயது பூர்த்தியடையாத மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றால், அதை அவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்யலாம் என சட்டத்திருத்ததில் சொல்லப்பட்டிருக்கிறது. இது ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை சட்டப்பூர்வமாக்குகிறது.” என்று ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்