Aran Sei

‘பாம்பே பேகம்ஸ் தொடரை நிறுத்த வேண்டும்’ – நெட்ஃப்லிக்ஸிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேண்டுகோள்

credits : the indian express

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், நெட்ஃப்லிக்சில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ”பாம்பே பேகம்ஸ்” தொடரை நிறுத்தக் கோரி, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் (மார்ச் 8, 2021), இணைய வழி தளமான நெட்ஃப்லிக்சில், பாம்பே பேகம்ஸ் எனும் இணைய வழி தொடர் (Web Series) வெளியானது. இந்தத் தொடர் சிறார்களை தவறாக சித்திரிப்பதாக ட்விட்டர் வழியே, இருவர், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகாரளித்துள்ளனர்.

முதல் நபர் அளித்த புகாரில், “இணைய வழி தொடர்களில், முன்னதாக சிறார்கள் உடலுறவில் ஈடுபடுவதாக காட்சிகள் வைக்கப்பட்டன, இந்தத் தொடரில், சிறார்கள் போதைப் பொருள் எடுத்துக் கொள்வதாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. பாம்பே பேகம்ஸ் தொடரில் 13 வயது சிறுமி போதைப்பொருள் (கொக்கைன்) எடுத்துக் கொள்வது போலவும், அந்த்ச் சிறுமி செல்லும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், போதைப்பொருளும், மதுவும் மட்டுமே இருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்று புகாரளித்துள்ளார்.

“தாண்டவ் படக்குழுவினரின் தலையை வெட்டி எடுக்க வேண்டும்” – கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பக்கம் முடக்கம்

இரண்டாவது நபர் அளித்துள்ள புகாரில், “ஒரு சிறுமி, ஒருவருக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்புவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன” என்று புகாரளித்துள்ளார்.

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

இந்த இரண்டு புகார்களின் மீதும் நடவடிக்கை எடுத்துள்ள, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ”சிறார்களை தவறாக சித்தரிக்கும் இணைய வழி தொடரான ‘பாம்பே பேகம்ஸ்’ தொடரை நிறுத்தக் கோரி, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்தத் தொடரில் இருக்கும் கருத்து இளம் வயதினரின் மனதை பாழ்படுத்தும். இது போன்ற தொடர்கள், சிறார்களைத் துன்புறுத்துபவர்களிடத்திலும் சுரண்டுபவர்களிடத்திலும் கொண்டு சேர்த்து விடும்” என நெட்ஃபிலிக்சில் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தாண்டவ்’ வெப் சீரிசை தொடர்ந்து ‘மிர்சாப்பூர்’ தொடருக்கு எதிர்ப்பு – தடை செய்ய கோரும் மனுவில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

மேலும் இந்தப் புகாருக்கு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்