Aran Sei

கொரோனாவினால் பெற்றோரை இழந்து அனாதைகளான குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் – மாநிலங்களவை உறுப்பினர் பௌசியா கான் வேண்டுகோள்

கொரோனா தொற்று காலத்தில்,  அனாதைகளான குழந்தைகளுக்கு  கல்வியில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டுமென, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பௌசியா கான் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்’ – பிரதமருக்கு வைகோ கடிதம்

இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று காலத்தில் அனாதைகளான குழந்தைகள் படிப்பை முடிக்கும் வரை கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும், கொரோனா காலத்தில் பல குடும்பங்களில் வருமானம் ஈட்டக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது,தாய்,தந்தை இருவரும் இறக்க நேர்ந்துள்ளதால் எண்ணற்ற குழந்தைகள் அனாதைகள் ஆகியுள்ளதாக பௌசியா கான் தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடிதம் எழுதிய ஐந்தாம் வகுப்பு மாணவி – பொறுப்புள்ள குடிமகள் என்று பாராட்டி பதில் கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

அதுமட்டுமன்றி, கொரோனவினால் அனாதைகளான குழந்தைகளுக்கு, ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதி உதவி திட்டம் குறித்து தெரிவித்துள்ள அவர், ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தினால் அனாதைகளான குழந்தைகள் 18 நிரம்பிய பின்னரே பயன்பெற முடியும் எனவும்  , எனவே, பள்ளி படிப்பிலிருந்து பட்டமேற்படிப்பு வரை உதவும் வகையில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் வகுப்பில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

மேலும்,”ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் வழியாக அவர்களுக்கு பொருளாதார உதவி அளிப்பது மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்கள் வழங்கும் மிகவும் அத்தியாவசியமான கல்வியையும் ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும்” என்று மாநிலங்களவை உறுப்பினர் பௌசியா கான் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்