Aran Sei

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி – இந்திய அளவில் ஒருக்கிணைக்கும் தேசியவாத காங்கிரஸ்

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு அரசியல் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 12), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு பரந்தப்பட்ட கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேசிய அளவிலான கூட்டணியின் அவசியம் குறித்தும், அதற்கு பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான பணியில் உள்ளது குறித்தும்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பேசியிருக்கிறார்.” என்று நினைவூட்டியுள்ளார்.

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த சரத் பவார் தலைவராக வேண்டும்’ – தொடர்ந்து வலியுறுத்தும் சிவசேனா

நேற்று (ஜூன் 11), சரத் பவார் இல்லத்தில், அவரும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து பேசுகையில்,  “பிரசாந்த் கிஷோர் தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை குறித்து நன்கு அறிந்தவர். இருவரின் மூன்று மணி நேர விவாதத்தின் போது, ​​இது நிச்சயமாக கருத்தில் கொள்ளப்பட்டு, பேசப்பட்டிருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்