Aran Sei

‘தொழிலதிபர்களுக்கு கொள்ளையடிக்க உதவும் மோடியின் அரசு ஒரு கிழக்கிந்திய கம்பெனியை போன்றது’ – மகாராஷ்ட்ரா அமைச்சர் தோரத்

credits : op india

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மகாராஷ்ட்ரா மாநில விவசாய சட்டங்களைத் திருத்தி, ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டபேரவை மழைக்கால கூட்டத்தொடரில் அதன் ஒப்புதலை பெற, அம்மாநில ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சரத் பவார் முயற்சி எடுத்துள்ளார்  .

இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 9), சரத் பவார் தனது இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில்,  மகாராஷ்ட்ரா மாநில விவசாயத்துறை அமைச்சர் தாதா பூஸ், வருவாய் துறை அமைச்சர் பாலாசாகேப் தோரத் மற்றும் சில மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அக்கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாலாசாகேப் தோரத், “ஒன்றிய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால் மாநில விவசாய சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறோம். இப்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களின் (ஏபிஎம்சி) பாதுகாப்பு, விவசாயிகளின் பிரச்சனைகளை சரிசெய்தல் மற்றும் விளைப்பொருட்கள் வியாபாரத்தின் போது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உறுதி செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘2019-2020-ல் பெருநிறுவனங்களிடமிருந்து 217 கோடி நிதியுதவி பாஜக பெற்றது’ – தேர்தல் ஆணையம் தகவல்

மேலும், “மூத்த தலைவரும் விவசாயத்துறையின் முன்னாள் அமைச்சருமான சரத் பவார், விவசாய சட்டங்களை உருவாக்குவதற்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விவசாயிகள் நலன்கள்தான் எங்களுக்கு மிக முக்கியமானவை.” என்று அவர் கூறியுள்ளார்.

“மோடி அரசாங்கமானது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியைப் போன்றது. ஒன்றியத்தில் ஆளும் அரசாங்கத்தின் உதவியுடன், ஒரு சில தொழிலதிபர்கள் கொள்ளையடிக்கிறார்கள். நமது பிரதமர் பெரிய முதலாளிகளுக்கு அடிமையாகிவிட்டார்.” என்று பாலாசாகேப் தோரத் விமர்சித்துள்ளார்.

மகாரஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருந்தது.

source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்