Aran Sei

வீடியோக்கான் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் அனில் அகர்வால் – தடை விதித்து உத்தரவிட்ட தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

வீடியோக்கான் நிறுவனத்தைத் தொழிலதிபர் அனில் அகர்வாலின் ட்வின் ஸ்டார் டெக்னாலஜிஸ் நிறுவனம் வாங்கும் முடிவிற்கு தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) தடைவிதித்துள்ளது.

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தால்  (என்சிஎல்டி) அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத் திட்டத்திற்கு எதிராக பாங்க் ஆஃப் பரோ  மற்றும் ஐஎஃப்சிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த என்சிஎல்ஏடி தலைவர் அசோக் இக்பால் சிங் கீமா அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கைச் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பெகாசுஸ் செயலி: உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்திய திருமாவளவன்

அந்த மனுவில், “வீடியோகான் நிறுவனத்தை வாங்கும் முடிவு செய்துள்ள ட்வின் ஸ்டார் நிறுவனம், வீடியோகானின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்றும், வீடியோகான் செலுத்த வேண்டிய தொகையின் பெரும்பகுதி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (என்சிடி) மூலம் செலுத்தப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

‘பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் புகுத்தக்கூடாது’ – நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ரோமிலா தாப்பர் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கடிதம்

ரூ. 64, 838 கோடி மதிப்பிலான வீடியோகான் குழுமத்தின் 13 நிறுவனங்களுக்கு ரூ. 2,962 கோடி செலுத்த ட்வின் ஸ்டார் டெக்னாலஜிஸ் முடிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த தொகையில் 4.15 விழுக்காடு மட்டுமே மற்றும் இதனால் இதனால் 95.85 விழுக்காடு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்