Aran Sei

‘ஏழு தமிழர்களையும் நெடுங்கால இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்’ – அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கூட்டறிக்கை

ழு தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள், சந்தன கடத்தல் வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு சார்பில் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த கூட்டறிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், நீதி மற்றும் ஜனநாயக சிந்தனையாளர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆகியோர் அடங்கிய 78 பேர் இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை கலைஞர் பிறந்தநாளில் விடுவிக்க வேண்டும்’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள்

மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “கருணை மற்றும் நீதியின் அடிப்படையில் பாரபட்சம் பாராமல் ஏழு தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோரை தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்

மேலும், “குற்றயியல் சட்டம் 432 அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும் ஆனால் அரசியல் சட்டப்படி பிரிவு 161 இன் அடிப்படையில் முன் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிடினும் மாநில அரசுகளுக்கு முன் விடுதலை செய்வதற்கு உரிமை உண்டு. எனவே தான் இருபது ஆண்டுகள் சிறைவாசம் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு முன்விடுதலை திட்டத்தை 1994இல் கொண்டு வந்தது”என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

’குஜராத்துக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டிற்கு ஒரு நீதி: தென்னிந்தியாவை துயரத்தில் ஆழ்த்தும் கூடங்குளம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 1750 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டதாகவும் இந்நிலையில் , ஒரே சமயத்தில் அத்தனை நபர்களையும் விடுதலை செய்ய முடியாது என ஆளுநர் மறுத்த நிலையில், மாநில அரசால் அவ்வப்போது சில நூறு நபர்களாக விடுதலை செய்யப்பட்டதாகவும், எனினும்,
பெரும்பாலான இஸ்லாமிய சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

அதுமட்டுமல்லாது, சமீபத்தில் கோவை சிறையில் பத்து ஆண்டுகளை கழித்த சிறைவாசிகள் 334 பேரில் 207 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள 41 முஸ்லிம் சிறைக்கைதிகளில் வெறும் ஏழு பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

இதே போன்று, இருபது ஆண்டுகளை கழித்த சிறைவாசிகளில் மொத்தமுள்ள 67 நபர்களில் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் முப்பது முஸ்லிம் சிறைக்கைதிகளில் ஒருவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட்டுள்ளதாகவும், இதேபோல் வீரப்பனின் அண்ணன் மாதையன் அவர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே,கடந்த காலத்தில் சிறைவாசிகள் விடுதலையில் நிகழ்த்தப்பட்ட பாரபட்சங்கள் கடந்து அனைத்து சிறைவாசிகளையும் குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகள், ஏழு தமிழர்கள், வீரப்பன் அண்ணன் மாதையன், பட்டியலினத்தவர்கள், மற்றும் விளிம்பு நிலை மக்கள் உட்பட 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை தாங்கள் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்