Aran Sei

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தகவலையும் திரட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

2021 ஆம் ஆண்டு கணக்கிடப்படவிருக்கிற மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த தகவலையும் கணக்கிட வேண்டும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய சமூக நீதி அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு – இணைய வழியில் தகவல்களை திரட்ட மத்திய அரசு திட்டம்

நேற்றைய தினம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலர் ஆனந்த் குமார் மத்திய சமூக நீதி அமைச்சகத்திற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த தகவலையும் சேகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

அண்மையில் நடந்த ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இந்த விஷயத்தைப் பரிசீலித்தது ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட திட்டமில்லை – மாநிலங்களவையில் அமைச்சர் நித்யானந்த் பேச்சு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ,வேலைவாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றுக்காகச் செயல்படுவதற்கு சட்டப்படி இவ்வமைப்பிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதிவாரி அட்டவணையில் எண்ணற்ற குழப்பங்கள் நிலவும் நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தகவலையும் கணக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையை வழங்கியுள்ளது.

SOURCE: THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்