சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு சட்டரீதியிலான கோரிக்கை என்றும் நம் நாட்டிற்கு சிறந்த கொள்கைகளை உருவாக்க அது உதவும் என்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (என்சிபிசி) தலைவர் டாக்டர் பகவான் லால் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
நேற்று(நவம்பர் 26), பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பகவான் லால் சாஹ்னி, “இக்கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் என்னை சந்திக்கின்றன. இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இனிமேல் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான நலன்களை நல்கும் கொள்கைகளை உருவாக்க, கொள்கை வகுப்பாளர்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்ப நிச்சயமாக உதவும். அதன் வழியாக, எத்தனை பேர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு தெரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல் கட்சிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று கோரத் தொடங்கியுள்ளன என்று பகவான் லால் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.