Aran Sei

மகாராஷ்டிராவுக்கு ரெம்தேசிவிர் மருந்தைத் தரமறுக்கும் மத்திய அரசு குஜராத்துக்கு வழங்கியது ஏன்? – மகாராஷ்டிர அமைச்சர் கேள்வி

கொரோனா தடுப்பு மருந்தான ரெம்தேசிவிர் தடுப்பூசியை மகாராஷ்டிர மாநில அரசுக்கு வழங்கக் கூடாதென, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்தேசிவிர் கடத்தல் – தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்த உத்திரபிரதேச காவல்துறை.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மகாராஷ்டிர அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த ரெம்தேசிவிர் தடுப்பூசி வேண்டி, அதை உற்பத்தி செய்யும் 16 மருந்துத் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனங்களிடம் கேட்டபோது, மத்திய அரசு மஹாராஷ்டிர அரசுக்கு ரெம்தேசிவிர் மருந்துகளை அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். மருந்தை வழங்கினால், அந்நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது “. என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு

மேலும், “இது போன்றதொரு கொடுமையான சூழலில் மஹாராஷ்டிர அரசுக்கு மருந்துத் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனங்களிடமிருந்து ரெம்தேசிவிர் மருந்தைக் கைப்பற்றி மக்களுக்கு அளிப்பதை தவிர வேறு வழியில்லை” என்றும் அமைச்சர் தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: பாஜக தலைவருக்கு எப்படி கிடைத்தது 5000 தடுப்பூசிகள்? – காங்கிரஸ் கேள்வி

மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்குறித்து பதிவிட்டுள்ள அவர், “16 மருந்து தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் வழியாக 2 லட்சம் ரெம்தேசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய இயலும். கொரோனா காரணமாக மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை வைத்துள்ளது. மேலும், இந்நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனைக்கு அனுமதி கேட்டபோது மத்திய அரசு அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று மஹாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும், குஜராத் மாநில அரசுக்கு 1,42,000 ரெம்தேசிவிர் தடுப்பு மருந்துகள் அளிக்க உத்தரவிட்டு மகாராஷ்ட்ர அரசுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளைத் தர மறுக்கும் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாட்டையும் அவர் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்