கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டர்வர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருக்கும் நிலையில், கொரோனாவால் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் படம் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேதியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 17) அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது, “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது. கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் படம் இருக்க வேண்டும்.” என்று நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
“தடுப்பூசியை இந்தியாவில் கொண்டு வந்ததற்கும், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் பாஜக தலைமையினால் மத்திய அரசுதான் காரணம் என்ற நற்பெயரை பெறுவதற்காக தடுப்பூசி சான்றிதழில் தனது புகைப்படத்தைப் பதிவிட மோடி விரும்புகிறார். அப்படியானால், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கும் அவர் பொறுப்பேற்று இறப்புச் சான்றிதழிலும் அவரின் படத்தை பதிவிட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
Source : ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.