பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்ட்ர அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
நவாப் மாலிக்கின் கட்சி தலைவரான சரத் பவாரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான பண மோசடி வழக்கில் தொடர்பிருப்பதாக நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடங்கியது யுத்தம் – உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் உத்தரவு
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நவாப் மாலிக், ”லடேங்கே, ஜீதேங்கே, சப் கோ எக்ஸ்போஸ் கரேங்கே (போராடுவேன், வெற்றி பெறுவேன், அனைவரையும் அம்பலப்படுத்துவேன்)” என தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நவாப் மாலிக்கை மார்ச் மூன்றாம் தேதிவரை வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டவிரோத பணம் பரிமாற்ற விவகாரம் – மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது
ஆரம்பத்தில் மகாராஷ்ட்ர முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் உடனான நவாப் மாலிக்கின் சொத்து பேரத்தை விசாரித்து வந்த அமலாக்கத்துறையினர் தற்போது, தாவூத் இப்ராஹிமின் உதவியாளர்களிடம் இருந்து சந்தை மதிப்பை விட குறைவான விலையில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக விசாரித்து வருகிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் குர்வாவில் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை ரூ. 80 லட்சத்திற்கு நவாப் மாலிக் வாங்கியது தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ. 80 லட்சத்தில் ரூ 25 லட்சம் காசோலையாகவும் ரூ 55 லட்சம் ரொக்கமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.