Aran Sei

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா – குளறுபடிகளின் கூடாரமாகிறதா பஞ்சாப் காங்கிரஸ்?

ஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (செப்டம்பர் 28), காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு நவஜோத் சிங் சித்து எழுதிய கடிதத்தில், தான் மாநில கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்து இந்த ஆண்டு ஜூலை மாதம் தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அக்கடிதத்தில், “ஒரு மனிதனின் குணச் சரிவு சமரசங்களைக் கோரும் மூலையில் இருந்தே தொடங்குகிறது. பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் நலனுக்கான செயற்பாடுகளில் நான் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மீது மீ டூ புகார்- பதவி விலகக்கோரும் தேசியப் பெண்கள் ஆணையம்

பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் சித்துவின் முடிவிற்கு என்ன காரணம் என்று அவர் தெளிவு படுத்தவில்லை.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இந்த விவகாரம் குறித்து செய்துள்ள ட்வீட்டில், சித்து ஒரு உறுதியான மனிதர் அல்ல என்றும் அவர் பஞ்சாப்பைப் போன்ற ஒரு எல்லை மாநிலத்திற்கு உகந்தவர் அல்ல என்றும் விமர்சித்துள்ளார்.

அமரீந்தர் சிங் சித்துவை கடுமையாக எதிர்த்து வந்தார். அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்