Aran Sei

உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் – சொந்த கிராமத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு மக்கள் அஞ்சலி

ஷ்யா-உக்ரைன் போரின்போது நடந்த தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டு, கர்நாடகாவில் உள்ள அவரது கிராமத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், மார்ச் 1 அன்று கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயது மாணவர் நவீன், உணவு வாங்கச் சென்றபோது, ​​நடந்த தாக்குதலில் உயிரிழந்தார்.

நவீனின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன.

மருத்துவ ஆராய்ச்சிக்காக நவீனின் உடலை தானம் செய்ய அவரின் பெற்றோர் முடிவு செய்தனர்.

இந்தியா கொண்டு வரப்படும் நவீனின் உடல் : உடலை மருத்துவமனைக்கு தானம் செய்ய பெற்றோர் முடிவு

“என் மகன் மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தான், அது நடக்கவில்லை. குறைந்த பட்சம் அவனது உடலாவது மருத்துவ மாணவர்களின் படிப்புக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில்தான், நாங்கள், மருத்துவ ஆராய்ச்சிக்காக நவீனின் உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று நவீனின் தந்தை சங்கரப்பா கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 20), காலை, பெங்களூரு விமான நிலையத்திற்கு நவீனின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது, நவீனின் குடும்பத்தினர், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் விமான நிலையத்தில் இருந்தனர்.

நவீனின் உடலை ஏற்றி வந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அதிகாலை 3:00 மணியளவில் தரையிறங்கியது.

கர்நாடகா: உக்ரைனிலிருந்து இந்தியா வந்தடைந்தது மாணவர் நவீனின் உடல்

அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மரியாதை செய்ததைத் தொடர்ந்து, நவீனின் குடும்பத்தினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நவீனின் உடல் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. நவீனின் உடல் அவரது கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் வருகை காரணமாக அக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்: ‘நவீனின் உடலுக்கு பதிலாக 10 பேரை விமானத்தில் கொண்டுவரலாம்’ –பாஜக எம்எல்ஏ

நவீனின் வீட்டுக்குச் செல்லும் பாதையில் தடுப்புகள் போடப்பட்டு, வீட்டிற்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நவீன் வீட்டிற்குள் நுழையவும் வெளியேறவும் மக்களுக்கு போதுமான வசதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள எஸ்எஸ் மருத்துவக் கல்லூரிக்கு நவீனின் உடல் தானமாக வழங்கப்படவுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்