Aran Sei

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

ஜூலை 6 அன்று, அசாமில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ஐந்து இஸ்லாமிய துணைக் குழுக்களை ‘கிலோஞ்சியா முசல்மான்’ அல்லது பழங்குடி அசாமிய இஸ்லாமியர்களை அடையாளம் காண ஒப்புதல் அளித்தது.  அவர்களை வங்காள மொழி பேசும் அல்லது பொதுவாக மியாஸ் என்று குறிப்பிடப்படும் வங்காள வம்சாவளி இஸ்லாமியர்களிடமிருந்து ஒதுக்கி வைத்தது.

சையத், கோரியா, மோரியா, உள்நாட்டு குடிகள், ஜுல்ஹா ஆகிய ‘அசாமிய இஸ்லாமிய துணைக்குழுக்களுக்கு தனித்துவமான, பூர்வீக சமூகங்களாக அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும், ஆவணப்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அரசாங்கம் நியமித்த ‘கலாச்சார அடையாளத்திற்கான துணைக்குழு’ வின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்தது. தொலைக்காட்சி செய்தியாளர் வஸ்பிர் ஹுசைன் தலைமையில் இந்த துணைக்குழு ஜூலை 2021 இல் அமைக்கப்பட்டது.

என்.எல்.சியின் புதிய சுரங்கம், அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது: பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

இது மற்ற ஆறு துணைக் குழுக்களுடன் அமைக்கப்பட்டு, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்தது. மற்ற துணைக்குழுக்கள் சுகாதாரம், கல்வி, நிதி உள்ளடக்கம், திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் மக்கள்தொகை நிலைப்படுத்தல் ஆகிய பிரச்சினைகள் குறித்து தங்கள் அறிக்கைகளை கொடுத்தன.

ஏப்ரல் 23 அன்று துணைக்குழுக்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்த உடனேயே, சில பரிந்துரைகள் ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும் என்று துணைக்குழுக்களில் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு கூறியது.

“அசாமில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இனத்திற்கு பதிலாக அவர்களின் மதத்தின் மூலம் அடையாளம் காணும் பரிந்துரை தவறானது மற்றும் பிளவுபடுத்தும் வகையில் உள்ளது, ஏனெனில் நமது வரலாற்றில் ‘அசாமி இஸ்லாமியர்கள்’ பற்றிய குறிப்பு இல்லை,” என்று சாது அசோம் கோரியா ஜாதிய பரிஷத் (SAGJP) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2021 இல், குழு அமைக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அசாம், ஜனகோஸ்திய சாமன்னய் பரிஷத் (JSPA) என்ற மற்றொரு அமைப்பு, அசாமிய பேசும் இஸ்லாமியர்களின் முதல் ‘கணக்கெடுப்பு’ நடத்த ஒரு வலைதளத்தைத் தொடங்கியது. சமூகத்திற்கான ‘ஜனகோஸ்தி’ அல்லது இனக்குழு என்ற நிலைக்காக பிரச்சாரம் செய்து வரும் அதன் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

“அசாமி இஸ்லாமியர்களை ஒரு தனித்துவமான குழுவாக அங்கீகரிக்கும் அரசாங்கத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் கலாச்சாரக் குழுவின் பரிந்துரைகள் சில திருத்தங்களுடன் செய்யப்படலாம்” என்று JSPA இன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் பாஜக தலைவருமான சையத் மொமினுல் ஆவல் கூறினார். பரிந்துரைகளை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை அவர் விவரிக்கவில்லை.

விதை வர்த்தக ஒத்திசைவுத் திட்டம்: ஆப்பிரிக்காவின் விவசாயத்தை மலடாக்கும் திட்டம்

முதலில் அசாமியரை வரையறுங்கள்

ஹார்ட்-நிக்காச்சோஸில் மதம் மற்றும் மோதல் பற்றிய ஆய்வு மைய அமைதி குறித்த படிப்புக்கான தலைவரும், அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான யாஸ்மின் சைகியா, “அசாமிய மக்கள்” என்ற குறியீடானது இன்னும் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை  என்பதால்  ‘அசாமிய இஸ்லாமியர்’  என்ற குறிச்சொல்லே அடிப்படையில் குறைபாடுடையது என்கிறார்.

1951க்கும் 1971க்கும் இடையில் குடிபெயர்ந்தவர்களுக்கு கிடைக்காத சில பாதுகாப்பு  உரிமைகளை அசாமிய மக்களுக்கு வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் 2019 இல் அசாம் உடன்படிக்கையின் பிரிவு 6ன் படி கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பிப்லப் குமார் சர்மா தலைமையில் உயர்மட்டக் குழு  ஒன்றை அமைத்தது. ஹுசைனை உறுப்பினராகக் கொண்ட இந்தக் குழு, ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்புவதற்காக, அப்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவாலிடம் தனது பரிந்துரைகளை அளித்தது.

1985 ஆம் ஆண்டில் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான இந்தியாவின் போரின் போது, ​​ இன்றைய  வங்கதேசத்தில் இருந்து, அசாமுக்கு அகதிகள் பெருமளவில் இடம்பெயர்ந்ததன் விளைவாக ஆறு ஆண்டுகளாக நடந்த புலம்பெயர்ந்தோர் – எதிர்ப்பு இயக்கத்தின் வன்முறை  நிறைந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி, மார்ச் 24, 1971 அன்று நள்ளிரவுக்கு முன் வந்த எவரும் இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால் “அசாமியர்கள்” என்ற எல்லைக்குள் யார் யார் வருவார்கள் என்பதை அது வரையறுக்கவில்லை. அறிக்கையின் மீது  ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைதியாகவே இருந்த நிலையில், பிரிவு 6 குழு அதன் முக்கிய பரிந்துரைகளை பிப்ரவரி 2020 இல் “வெளிப்படுத்தியது”. ஜனவரி 1, 1951 அன்று அல்லது அதற்கு முன் அசாம் பிரதேசத்தில் வசிக்கும் அசாமிய மொழி பேசுபவர்கள், பிற பூர்வீக குடிமக்கள், பிற பூர்வீக பழங்குடியினர், அனைத்து இந்திய குடிமக்கள் மற்றும் இந்த நான்கு வகைகளைச் சேர்ந்த மக்களின் சந்ததியினர் ஆகிய ஐந்து பிரிவினரை அசாமியர்களாகக் கருதலாம் என அதில் கூறப்பட்டிருந்தது. “அசாம் அரசாங்கத்தின் முடிவு பிரிவினையை வெளிப்படுத்துகிறது. இது ஒருங்கிணைக்கும் அசாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. ஒரு பெரிய மதக் குழுவில் உள்ள ஒரு சிறிய குழுவை வடிகட்டுவது மற்றும் அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவது சமூக-பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும்” என்று திருமதி சைகியா கூறினார்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசாமில் உள்ள மொத்த மக்கள் தொகையான 3.12 கோடி மக்களில் 1.06 கோடி இஸ்லாமியர்கள் (34%) உள்ளனர்.மாநிலத்தின் தற்போதைய இஸ்லாமியர் மக்கள்தொகை 1.18 கோடி என்று துணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 42 லட்சம் பேர் சையத், கோரியா, மோரியா, உள்நாட்டு குடிகள் மற்றும் ஜுல்ஹா ஆகிய ஐந்து “பூர்வீக” குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த 42 லட்சம் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உள்நாட்டு குடிகள் என்றும் அது குறிப்பிட்டது.

ஐந்து துணைக்குழுக்கள்

ஜூலை 2021 இல் அமைக்கப்பட்ட துணைக்குழு தனது அறிக்கையில் ஐந்து சமூகங்களை விவரித்துள்ளது.1205 ஆம் ஆண்டில் துருக்கிய-ஆப்கானிய இராணுவ ஜெனரலான பக்தியார் கில்ஜியின் படையெடுப்பின் போது மதம் மாறிய கோச்-ராஜ்போங்ஷி தலைவரான அலி மெக்கிற்கு அசாமில் உள்ள ஆரம்பகால மக்களில் உள்நாட்டு குடிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. குழு, சையதுகளை சூஃபி போதகர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களின் வழித்தோன்றல்கள் என்று விவரித்தது. 1497 மற்றும் 1630 ஆம் ஆண்டுகளில் முறையே அசாமுக்கு வந்த சையத் பதியுதீன் ஷா மதார் (மதன் பிர்) மற்றும் சையத் மொய்னுதீன் பாக்தாதி (ஷா மீரான் அல்லது அசான் ஃபகிர்) ஆகியோர் இந்த பிரசங்கிகளில் மிகவும் முக்கியமானவர்கள்.

1615 மற்றும் 1682 க்கு இடையில் அசாமில் படையெடுக்க முகலாயர்கள் மேற்கொண்ட பல முயற்சிகளின் போது, ​​ஆளும் அஹோம் ஆட்சியால் சிறைபிடிக்கப்பட்ட கோரியாக்கள் முகலாய வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறும் சில ஆவணங்களை துணைக்குழு மேற்கோள் காட்டியது. இந்த வீரர்களில் பலர், வங்காளத்தின் பண்டைய இஸ்லாமிய தலைநகரான கவுரைச் சேர்ந்தவர்கள்.  இதனால் ‘கோரியா’ என்று அறியப்பட்டனர். இருப்பினும்,  இப்பெயர் இஸ்லாத்திற்கு மாறிய ஒதுக்கப்பட்ட மக்களின் கிழக்கு அசாம் கிராமமான ‘கோரியா’  என்பதிலிருந்து பெறப்பட்டது  என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.இந்த மக்கள் அசாமில் குடியேறி, உள்ளூர் பெண்களை திருமணம் செய்து, படிப்படியாக அசாமிய சமுதாயத்தின் ஒரு பகுதியாக மாறினர் என்று துணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆசான் ஃபகிரின் காலத்தில் மதம் மாறிய பழங்குடியினரும் இந்துக்களும் கோரியாவின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

16 ஆம் நூற்றாண்டில் டர்பக் கானின் படையெடுப்பு முயற்சியின் பின்னர் அஹோம்களால் கைப்பற்றப்பட்ட போர்க் கைதிகளின் வழித்தோன்றல்களாகவும் மோரியாக்கள் விவரிக்கப்படுகிறார்கள்.1933 ஆம் ஆண்டு ஆங்கில வரலாற்றாசிரியர் எட்வர்ட் கெய்ட்டின் கூற்றின்படி, மோரியாக்கள் பித்தளை பொருட்கள் தயாரிப்பு வேலைகளுடன் தொடர்புடையவர்கள். சில மோரியாக்களின் மூதாதையர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்களை  செய்வதற்காக அஹோம் மன்னர்களால் கொண்டு வரப்பட்டனர்.

அசாமில் மேலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சமூகமாக பட்டியலிடப்பட்டுள்ள ஜுல்ஹாக்கள் ஆதிவாசிகள் என்று நம்பப்படுகிறது. முதலில் பிரிக்கப்படாத பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்லாத்திற்கு மாறினார்கள். அவர்கள் – முதலில் அஹோம் ஆட்சியின் போது நெசவாளர்களாகவும், பின்னர் ஆங்கிலேய தேயிலை தோட்டக்காரர்களால் கொண்டு வரப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும் இரண்டு கட்டங்களாக அசாமுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.

குழப்பமான சேர்த்தல்கள்

ஏப்ரல் 2021 இல் அசாமி இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கிய ஜேஎஸ்பிஏ (JSPA), இஸ்லாமியச் சமூகத்தின் மூன்று பிரிவுகளான கோரியா, மோரியா மற்றும் உள்நாட்டு குடிகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்தும்  தனியான தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற ஒரு பட்டியலை வெளியிட்டது.  1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தப்படுவதற்கு முன்னர் அசாமில் வாழ்ந்த இஸ்லாமியர்களை, பூர்வீகமாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களாக ஜேஎஸ்பிஏ கருதியதால், ஜுல்ஹாக்களை மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து விலக்கி விட்டனர்.

“தேயிலை தோட்டத்துடனான அவர்களின் தொடர்பு இறுதியில் அவர்களை அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (ST) என்ற  தகுதியுடையவர்களாக மாற்றும்”  என்ற மற்றொரு காரணத்தாலும்  ஜேஎஸ்பிஏ  தனது ‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘  இருந்து ஜுல்ஹாக்களை விலக்கியது.

“தேயிலை பழங்குடியினர்” என்று குறிப்பிடப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுட்டியா, கோச்-ராஜபாங்சி, மடக், மோரான்ஸ், தாய்-அஹோம்ஸ் (Chutiyas, Koch-Rajbongshis, Mataks, Morans, Tai-Ahoms)ஆகிய ஐந்து பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர்  கோரி தகுதியை வருகின்றனர். ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட விரும்பும் “தேயிலை பழங்குடியினர்”, 19 ஆம் நூற்றாண்டில் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் இடம்பெயர்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட சந்தால், கோல், பில், முண்டா, ஓரான் போன்ற 90 க்கும் மேற்பட்ட சமூகங்களை உள்ளடக்கியது. பெரும்பாலான ஜுல்ஹாக்கள் மற்ற “தேயிலை பழங்குடியினருடன்” வந்தனர், அவர்களில் சிலர் அசாமில் குடியேறிய பிறகு மதம் மாறியதாக கூறப்படுகிறது.

“ஐக்கிய நாடுகளின் வரையறையின்படி, ஜுல்ஹாக்கள் பழங்குடியினர் அல்ல. ஆனால், யார் அசாமியர் என்பதைத் தீர்மானிப்பதற்கான இறுதி ஆண்டாக 1951 எனக் கருதப்பட்டால், அவர்கள் பழங்குடியினராகக் கருதப்படலாம். பல ஜூல்ஹாக்கள் மைமென்சிங் மற்றும் சில்ஹெட் (வங்கதேசம்) பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களைப் போன்ற வங்கதேச வேர்களைக் கொண்டுள்ளனர்,”  என எஸ்ஏஜிஜேபி (SAGJP) இன் பொதுச் செயலாளர் மிர் ஆரிப் இக்பால் ஹுசைன், தி இந்துவிடம் கூறினார்.ஜுல்ஹாக்கள் கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் கோரியாக்கள், மோரியாக்கள் மற்றும் உள்நாட்டு குடிகளிடமிருந்து “முற்றிலும் வேறுபட்டவர்கள்”. கோரியாக்கள் மற்றும் மோரியாக்கள் பல அம்சங்களில் ஒரே மாதிரியாக உள்ளனர், அதே சமயம் உள்நாட்டு குடிகள்  இந்த இரண்டு சமூகங்களிலிருந்தும் வேறுபடுகிறார்கள், “ என திரு.உசைன் கூறினார்.

ஜுல்ஹாக்களுக்குள்ளும் வேறுபாடுகள் உள்ளன. ஜோர்ஹாட் முதல் திப்ருகர் வரையிலான பகுதியில் வாழும் மேற்கு அமின் ஜுல்ஹாக்கள் கிழக்கு அசாமின் ஜுல்ஹாக்கள்  தங்களை அவர்களை விட ” மேலான அசாமியர்கள்” என்று கூறிக்கொள்வதை எதிர்க்கிறார்கள்.மேற்கு அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நாங்கள் வங்க தேசத்தவர் அல்ல எனினும் பெரும்பாலும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறோம்,” என்கிறார்.

‘இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய இயலாது’ – அருந்ததி ராய்

அசாமிய இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் சையதுகளை ஒரு சமூகமாக வகைப்படுத்தியதில் குழப்பமடைந்துள்ளனர். “சையத் ஒரு சமூகம் அல்ல, ஆனால் ஒரு பரம்பரை.  அவர்கள் வரலாற்று ரீதியாக கோரியா குழுவைச் சேர்ந்தவர்கள்,”  என்பதால் ஜேஎஸ்பிஏ சையத்களை ஒரு தனி சமூகமாக பட்டியலிடவில்லை என்று உசைன் ஒப்புக்கொண்டார். “உயரமான அசாமி இஸ்லாமிய எழுத்தாளரான சையத் அப்துல் மாலிக் தன்னை ஒரு கோரியா என்று அழைத்துக் கொண்டு அதைப் பற்றி ஒரு கவிதையும் எழுதியுள்ளார். சையத், அசாமுக்கு மட்டும் உரியவர் அல்ல. வங்காள வம்சாவளியைச் சேர்ந்த சையதுகளை ஹோஜாயில் காணலாம்,” என  ஹோஜாயைச்  சேர்ந்தவரும், புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகக் கருதப்படும்  அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான மவுலானா பதுருதீன் அஜ்மல் கூறினார்.

தேவையற்ற விலக்குகள்

“அசாமி இஸ்லாமியர்கள்” பொதுவாக தங்களை பெரிய, முக்கியமாக இந்து, அசாமிய மொழி பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறார்கள். அதிவேளையில் வங்காள மொழி பேசும் அல்லது வங்காள வம்சாவளி இஸ்லாமியர்களுடன் இணைத்துப் பார்க்கப்படுவதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

அசாமிய இஸ்லாமியர் குறிச்சொல்லுக்கு “தகுதியான” குழுக்கள்  குறித்த  கலாச்சார துணைக்குழுவின் பட்டியலிலிருந்து வங்காள பூர்வீகம் அல்லது வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் விலக்கப்படுவதை சிலர்  ஐயுறுகின்றனர். தெற்கு அசாமின் பெங்காலி ஆதிக்கத்தில் உள்ள பராக் பள்ளத்தாக்கில் உள்ள பல இஸ்லாமியர்கள் தங்களை ஒதுக்கி வைப்பது தேவையற்றது என்று கூறுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

13 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்தோங்கிய கச்சாரி பேரரசில் தங்கள் தோற்றத்தைக் கண்டறிந்துள்ள  கச்சாரி இஸ்லாமியர்கள்,  ஐந்து இஸ்லாமியர் துணைக்குழுக்களை பூர்வீக அசாமிய இஸ்லாமியர்களாக அடையாளம் காண மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததது கண்டு வேதனையடைந்துள்ளனர்.  கச்சாரி இஸ்லாமியர்கள், இந்தியப் பிரிவினைக்கு முன்னும் பின்னும் வங்காளத்தில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்லாமியர்களிடமிருந்து தங்களை வேறுபட்டவர்களாகக் கருதுகின்றனர்.

பராக் பள்ளத்தாக்கின் பழங்குடி இஸ்லாமியர்களுக்கான சங்கத்தின் தலைவர் அதிகுர் ரஹ்மான் பர்புயான், கச்சாரி இஸ்லாமியர்களை ஒதுக்கி வைப்பது தேவையற்றது என்றும், இது “பெரும் அநீதி” என்றும்  கூறுகிறார்.

“புலம்பெயர்ந்தோர் அல்லாத” கச்சாரி இஸ்லாமியர்களும் பூர்வீக முத்திரைக்கு ஏன் தகுதி பெற்றுள்ளனர் என்று வாதிட்டு, துணைக்குழு   தன் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கு முன் அதனிடம் ஒரு விளக்கத்தை அளித்ததாக அவர் கூறினார்.

கச்சாரி இஸ்லாமியர் மற்றும் அசாம் ஜாதியா பரிஷத்தின் தலைவரான ஜியாவுர் ரஹ்மான்,  “2017 ஆம் ஆண்டில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) “பூர்வீக குடிமக்கள்” என்ற காரணத்தால் ஆவண ஆதாரங்கள் இல்லாமல் “தானாகவே சேர்க்கபடலாம் என்று தேசிய குடிமக்கள் பதிவேடு   ஆணையம் முன்மொழிந்த பழங்குடி இஸ்லாமியர் வகையினரில் தனது சமூகமும் அடங்கும்,” என்றார். அந்த முன்மொழிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அனைத்து பழங்குடி இஸ்லாமியர் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு ‘பூமிபுத்ரா (இஸ்லாம் தர்மி) சமன்வாய்ரோக்கி சங்க்ராம் சமிதி, அசோம்’ என்று அழைக்கப்படுகிறது. பெயர் “இஸ்லாமிய அசாம் மண்ணின் மைந்தர்கள் ஒருங்கிணைந்த இயக்கக் குழு” என்று அது மொழிபெயர்க்கப்படுகிறது.

“கச்சாரி இஸ்லாமியர்கள் திமாசா பழங்குடியினரிடமிருந்து மதம் மாறியவர்களாகவும், மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட துணைக்குழுகளில் உள்ள சில சமூகங்களை விட பழங்குடியினராகவும் இருக்கலாம். சில இஸ்லாமியர்களுக்கு பூர்வீகக் குறிச்சொல் வழங்கப்பட வேண்டுமானால், அசாமில் விரிவான வசிப்பிட வரலாற்றைக் கொண்ட அனைத்து சமூகங்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று ரஹ்மான் கூறினார்.

அசாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் பரவலான நம்பிக்கைக்கு மாறாக, வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் பல நூற்றாண்டுகளாக பராக் பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர்.இருப்பினும், அவர்களது மொழியியல் தொடர்பு தங்களை “தீண்டத்தகாதவர்களாக” ஆக்கியிருக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

“மாநிலத்தில் சமூகம் பழங்குடியினரும், வெளிநாட்டவர்களும் தனித்தனியாக ஒருமுனைப்படுத்தப்பட்ட அசாம் போராட்டக் காலகட்டம் (1979-85) போலின்றி,  ​​இன்று அசாமில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் உருவாகியுள்ளது,” என்று திரு. ரஹ்மான் கூறினார்.

“பராக் பள்ளத்தாக்கு இஸ்லாமியர்கள் பூர்வகுடிகளாகக் கருதப்படவில்லை, ஏனெனில் மதப் பிளவு அங்கு வலுவானது. பராக் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்லாமியர்கள் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டால் அங்குள்ள இந்து ஆதரவை இழக்க நேரிடும் என்று பாஜக அஞ்சுகிறது,”  என்று அவர் மேலும் கூறினார்.

அரசியல் நிகழ்ச்சி நிரலா?

வலதுசாரி அரசியல் கட்சிகளின் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை மேலும் முன்னெடுப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், இஸ்லாமியர்களுக்கான பூர்வீகக் குறிச்சொல்லுக்கான உந்துதல் பயனற்ற ஒரு முயற்சியாகும்,” என்று ரஹ்மான் கூறுகிறார்.“அசாம் இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை என்ன என்பதை முதலில் ஒருவர் கேட்க வேண்டும். கலாசார துணைக்குழுவின் முன்மொழிவுக்கான ஒப்புதல் பேரவையில் நிறைவேற்றப்படவில்லை; அமைச்சரவை முடிவு பூர்வீகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காது. பல பத்தாண்டுகளாக  நடைமுறையில் இருக்கும் ‘அசாம் இஸ்லாமியர்’ என்ற சொல்லில் புதிதாக எதுவும் இல்லை. இதனால்தான் எங்கள் கட்சி இந்தச் சொல்லை  ஊக்குவிப்பதில்லை.   பிரித்தாளும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அந்தப் பரிந்துரைகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர்  கூறுகிறார்.

கலாச்சார துணைக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. “அறிக்கையை சமர்ப்பிக்கும் வேலையை நாங்கள் செய்தோம். பந்து இப்போது அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் உள்ளது,” என்று அதன் தலைவர் வாஸ்பிர் ஹுசைன் சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைவாசலில் கூறினார்.

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

‘இஸ்லாமியர்குறிச்சொல்

கோரியாக்கள், மோரியாக்கள் மற்றும்  உள்நாட்டு குடிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்ஏஜிஜேபி  போன்ற அமைப்புகள் ‘இஸ்லாமியர்’ என்ற குறிச்சொல்லை  கவலைக்குரியதாகப் பார்க்கின்றன. “அசாமிய இஸ்லாமியர்’ என்ற சொல்லுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.  மேலும் கலாச்சார துணைக்குழு எங்களின் கருத்தைக் கேட்டபோது அறிவிப்பின் மூலம் அதை நீக்கக் கோரினோம். எமது இன அடையாளத்தைப் போன்று எமது மதச் சார்பு ஒருபோதும் முக்கியமானதாக இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக, கோரியா, அஹோம், மோரன் அல்லது மாடக் போன்றவை வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சமூகமாகும். ஆனால் துணைக்குழு எங்கள் உள்ளீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,” என்று தனது பெயரை வெளியிட மறுத்த எஸ்ஏஜிஜேபி யின் தலைவர் ஒருவர் கூறினார்.

மியாக்கள் அல்லது புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் தலைவர்களும், அசாமிய இஸ்லாமியர்கள் மீதான துணைக் குழுவை அமைத்தது பாஜகவின் அரசியல் நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்று கூறினர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டது ஏன்? – பாஜக ஆடும் அரசியல் விளையாட்டு

“ஒரு பிரிவு இஸ்லாமியர்களை மற்றொரு பிரிவு இஸ்லாமியர்களுக்கு  எதிராக நிறுத்துவது வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்களை மேலும் ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையாகும்” என்று வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான மங்காச்சரின் ஒருங்கிணைந்த அகில இந்திய ஜனநாயக முன்னணி (AIUDF) சட்டமன்ற உறுப்பினர் அமினுல் இஸ்லாம் கூறினார்.பண்பாட்டு துணைக்குழுவின் பரிந்துரைகளில், அசாமி இஸ்லாமியர்களை நாடாளுமன்றம் மற்றும் மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு அனுப்புவதற்கான பிரிவு 333 (இது ஆங்கிலோ-இந்தியர்களை சட்டப் பேரவைகளுக்கு பரிந்துரைக்க ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது) போன்ற ஒரு விதி உள்ளது. அசாமின் சட்ட மேலவை உருவாக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை சமூகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் துணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அசாமிய இஸ்லாமியர்களுக்கான மற்ற துணைக்குழுவின் வேறு சில பரிந்துரைகள் “சுதேசி கோட்டின்” இருபுறமும் உள்ள இஸ்லாமியர்களிடையே கவலையை எழுப்பியுள்ளன.மக்கள்தொகை நிலைப்படுத்தலுக்கான துணைக்குழு, மக்கள்தொகை கொள்கையை அமல்படுத்தவும், “பெரும்பாலும் பழங்குடி இஸ்லாமியச் சமூகத்திற்கு சேவை செய்யும் மருத்துவமனைகளில் கருப்பையக கருப்பை வாய் கருவிகளை பொருத்துவதற்கான கருத்தடை சேவைகள் மற்றும் சேவைகளை” பரிந்துரைத்துள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் துணைக்குழு, பெண்கள் தனிப்பட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், குறிப்பாக பொது இடங்களில் சமூக அடிமைத்தனத்தை நிராகரிப்பதிலும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் “நிகாப், புர்கா, ஹிஜாப் அணிய வற்புறுத்தக்கூடாது” என்றும் கூறியது. இது சீரான குடிமைச் சட்டத்தை (UCC) செயல்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

பா.ஜ.க.வும் அதன் சித்தாந்த நீரூற்றான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் மக்கள் தொகைக் கொள்கையையும், சீரான குடிமைச் சட்டத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

www.thehindu.com  இணையதளத்தில் ராகுல் கர்மார்கர் எழுதியுள்ள  கட்டுரையின் தமிழாக்கம்.

Srimathi உடம்பில் Bite Marks வந்தது எப்படி?Advocate Sankara Subbu Interview | Kallakurichi School TN

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்