மியான்மரில், ராணுவ ஆட்சியை வீழ்த்துவதற்காக ‘புரட்சி பத்திரம்’ என்ற பெயரில் ஜனநாயக ஆதரவு சக்திகளால் திரட்டப்படும் நிதிக்கு, மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.
‘தேசிய ஓற்றுமை அரசு’ என்ற நிழல் அரசாங்கம், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் ஜனநாயக அமைப்புகள், இன சிறுபான்மை அமைப்புகள் மற்றும் கவிழ்க்கப்பட்ட ஜனநாயக அரசின் பிரநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
ராணுவ அரசுக்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட முடிவு செய்த தேசிய ஒற்றுமை அரசு, கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து ‘புரட்சி’ என்று பெயரிடப்பட்ட 100 , 500, 1000 மற்றும் 5000 டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
திங்கட்கிழமையன்று (22.11.21), வெளியிடப்பட்ட மூன்றே மணி நேரத்தில், 30 லட்சம் லாடர் மதிப்புள்ள பத்திரிங்கள் விற்பனையானதாக தேசிய ஒற்றுமை அரசு தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த ‘புரட்சி’ பத்திரங்களுக்கு வட்டி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும், ஒரே நாளில் இந்திய மதிப்பில் சுமார் 45 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
“பாசிச ராணுவ ஆட்சியை வீழ்த்துவதற்கு மக்களிடம் உள்ள ஆர்வம் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது” என்று தேசிய ஒற்றுமை அரசின் செய்தித்தொடர்பாளர் டாக்டர்.சாசா ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை அரசை மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் தீவிரவாத அமைப்பு என்று கூறுகின்றனர்.
27 வயதுடைய மியான்மர் நாட்டை சேர்ந்த பெயர் தெரிவிக்க விருப்பப்படாத ஒருவர் “இரண்டு ஆண்டுகள் கழித்து பணத்தை திரும்ப பெறுவதற்காக இந்த பத்திரத்தை நான் வாங்கவில்லை. புரட்சிக்கு உதவி செய்யும் நோக்கத்திலேயே இந்த பத்திரத்தை வாங்கியுள்ளேன்” என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Source: Reuters
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.