Aran Sei

`இறுதிக்கட்ட பணியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு’ – மத்திய அரசு

credits : indian express

தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான (என்பிஆர்) அட்டவணையும் கேள்வித்தாளும் இறுதி செய்யப்பட்டு வருவதாக இந்திய அரசின் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2020 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி இந்தத் திட்டம் கால வரையின்றித் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

2003-ல் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை விதிகளின்படி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல் படியாக என்பிஆர் பார்க்கப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) டிசம்பர் 11, 2019 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட து. அந்தச் சட்டம் டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த ஆறு சமூகங்களுக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை அனுமதிக்கிறது”.

ஆனால், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குப் பயனளிக்கும் அதே வேளையில் முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவர் என்பதால் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது.

என்பிஆர் தகவல்கள் முதன்முதலில் 2010 இல் சேகரிக்கப்பட்டது. பின்னர் 2015 இல் புதுப்பிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற குழுவுக்கு ஒரு பரிந்துரை செய்தது. அதில் பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வு காரணமாக ஏற்படும் மாற்றங்களை இணைத்துக்கொள்ள” என்பிஆர்ஐப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியுள்ளது. “ஆதார் தனிப்பட்ட தரவு. ஆனால் என்பிஆர் குடும்ப வாரியான தரவைக் கொண்டுள்ளது” என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்றக் குழு என்பிஆரில் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் இடம் போன்ற கேள்விகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க முன்மொழிகிறது என்று குழுவுக்குத் தெரிவித்தது. இதன் பின்னணியில்தான் என்பிஆர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

என்பிஆரைப் புதுபித்ததற்காக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்குத் தொடர்பிருந்ததால் இது கடுமையாக எதிர்க்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடும் (என்பிஆர்), மக்கள் தொகை கணக்கெடுப்பும் (சென்சஸ்) இணைந்து செயல்பாட்டுக்கு வர இருந்தது. அதன் முதல் பகுதியாக வீடுகளின் கணக்கெடுப்படுகள் நடக்கப்பட இருந்தன. லட்சத்தீவு, மேகாலயா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புது தில்லி ஆகிய பகுதிகளில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்தக் கணக்கெடுப்பு நடக்கப்படவிருந்தது.

இந்நிலையில் இதன் தற்போதைய நிலவரம் குறித்து தெரிந்துகொள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு எப்போது நடைமுறைக்கு வரும் எனும் கேள்விக்கு ”என்பிஆரின் அட்டவணையும், கேள்வித்தாளும் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும்”, முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) எப்போது நடைபெறும் எனும் கேள்விக்கு ”அது பற்றியான தகவல் இல்லை” எனவும் பதில் கிடைத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் புதுப்பிக்கபட்ட என்பிஆரின் கேள்விகளான ”தந்தை மற்றும் தாயின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம், கடைசியாக வசிக்கும் இடம் மற்றும் தாய்மொழி ” ஆகியவை கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளன

மார்ச் மாதம் ஒரு தகவல் அறியும் பதிலில், துணை பதிவாளர் ஜெனரல் ஏ.கே.சமல், ”மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 தொடர்பான செயல்முறை இயல்பாக உருவானது. இதைப் பற்றிப் பொதுவெளியில் பேசுவது குழப்பத்தை உருவாக்கி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும்” என்று கூறியுள்ளார். “எனவே இவை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் பிரிவு 8 (1) இன் கீழ் வழங்கப்படாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) “இதை வெளிப்படுத்தப்படுவது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, திட்டம், விஞ்ஞானம் மற்றும் பொருளாதார நலன்கள், வெளிநாட்டு அரசுடன் உறவு அல்லது சண்டையைத் தூண்டுவதற்கு வழிவகுக்கும்” என்பதனால் இதை வழங்க மறுத்துள்ளார்.

தி இந்துவில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்