Aran Sei

மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் கண்டனம்

ருத்துவப் படிப்பில் உறுதிமொழியை மாற்றும் மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையத்தின்பரிந்துரையை அனுமதிக்க மாட்டோம்.  திணிப்பு எந்த வழிகளில் வந்தாலும் எதிர்ப்போம் என்று தமிழ் நாடு மருத்துவ மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – ‘மகரிஷி சரக் ஷபத்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள பரிந்துரை

இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம்,  ஹிப்பாகிராடீஸ் உறுதிமொழிக்கு பதிலாக சரக் ஷபத் – ன் உறுதிமொழியை மருத்துவ மாணவர்கள் ஏற்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்காக சொல்லப்படும் காரணம் சரக் ஷபத் இந்தியர், எனவே வெளிநாட்டவரின் உறுதிமொழியை எடுக்க வேண்டாம் என்று வாதிடுகின்றனர். இதில் அறிவியல் பூர்வமான காரணங்கள் எதுவுமில்லை. மருத்துவத்தை பொறுத்தவரை சர்வதேச கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகள் (Theory) சரியானதாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் எந்த மூலையிலும் பயன்படுத்தலாம். அதேபோலத்தான் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களின் ஆலோசனைகளும்.

மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் பிற நாட்டு நல்லறிஞர்களின் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். எனவே ஒருவர் வெளிநாட்டுக்காரர் என்பதாலேயே நவீன மருத்துவத்தில் அவரின் முக்கிய பங்கை மறுத்துவிட்டு அவரை புறக்கணிப்பது சரியல்ல. மேலும் இவர்கள் கூறும் சரக் சபத் பற்றியும் அவர் எழுதியதாக சொல்லப்படும் சரக சம்ஹிதை( ஆயுர்வேத மருத்துவத்தின் வழிகாட்டும் நூல்) மூலநூல் பற்றியும் முறையான சான்றுகள் இல்லை.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

திரிதபாலா என்பரிவரின் மூலம் கிடைத்தது என்ற ஒரு கருத்தும் 1890 காலக்கட்டத்தில் பிரிட்டீஷ் ஆட்சியின் போது இராணுவ அதிகாரியாக இருந்த ஹாமில்டன் போவர் (Hamilton Bower) என்பவரால் சீனாவில் குஞ்ச பகுதியில் சிதிலமடைந்திருந்த புத்த மடாலயத்தில் கிடைத்த சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளால் எழுதப்பட்டிருந்த பனையோலைச் சுவடுகளை மீட்டு வந்து தொகுக்கப்பட்ட மற்றொரு கருத்தும் நிலவுகிறது.

மதங்களிலிருந்து மருத்துவத்தை பிரித்தெடுத்த நவீன மருத்துவத்தின் அடிப்படையில் நாம் ஹிப்பகிராடீசை மற்றும் சரக் ஷபத் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

குருகுலக்கல்வி முறை, பசுக்களுக்கும் பிராமணர்களுக்கும் பணம் செலுத்துதல்; ராஜாவுக்கு எதிரானவர்கள்,மருத்துவர்கள் அல்லது சமூகமே வெறுக்ககூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்ற பழமைவாதக் கருத்தியலை கொண்டுள்ள சரக் ஷபத் – ஐ ஒப்பிடும் போது: கி.மு 460 – 377 காலகட்டத்தில் அதுவரைக்கும் மனிதர்கள் மீது சினம்கொண்டு கடவுள் அளிக்கும் தண்டனை தான் நோய் என்றும் அதை குணப்படுத்த மந்திரங்களையும் மூடநம்பிக்கைகளையும் பயன்படுத்தி வந்த கிரேக்கத்தின் பழங்கால மருத்துவத்தை அடியோடு உடைத்து அங்கு அறிவியலை வைத்தது மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமன உறவைப் பற்றி பேசும்போது, நோயாளிகளிடம் அன்பு காட்ட வேண்டும். சாதாரண நோய்களுக்கு எளிய மருந்துகளே போதும், தீவிர சிகிச்சை விசயத்தில் மருந்துகளை ஆராய்ந்து கொடுக்க வேண்டும். நோயாளிகளை முரட்டுத்தனமாக கையாளக்கூடாது. உட்பட பல கருத்துக்களை கூறியுள்ளதோடு பல இடங்களுக்குச் சென்று மருத்துவமும் பார்த்த ஹிப்பாகிராடீஸின் கருத்துக்களை நவீன மருத்துவத்திற்கு வழிகாட்டியாக உள்ளது என்பதை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் அழுத்தமாக வைக்கிறது.

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

உலகத்தின் பல (மூட) நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி பல பரிணாமங்களை அடைந்திருக்கும் அறிவியல் இருக்கும் இடத்தில் வெறும் நம்பிக்கைகளைக் கொண்டு நிரப்பினால் அறிவியலையும் அதை சார்ந்திருக்கும் மருத்துவத் துறையும் தாங்கி நிற்கும் அடித்தளம் ஆட்டங்காணும் என்று எமது சங்கம் எச்சரிக்கிறது.

மேலும் 1948-ல் அதாவது இரண்டாம் உலகப் போருக்குபின் ஜெனிவா பிரகடனத்தில் முன்மொழியப்பட்டு இன்றுவரை உலக மருத்துவ சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஹிப்பகிராடீஸ் உறுதிமொழியை மாற்றக்கூடாது என்று மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இந்த திணிப்பிற்கு எதிராக மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களின் சங்கங்களும் ஓரணியாய் இணைவோம் என்று தமிழ் நாடு மருத்துவ மாணவர் சங்கமும் கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

***************                                    *******************************                  *******************

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்