Aran Sei

மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – ‘மகரிஷி சரக் ஷபத்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள பரிந்துரை

credits : The Indian Express

“மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்ற மருத்துவ கல்வி ஒழுங்குமுறை ஆணையமான தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் பிடிப்பிற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையம், “உலகின் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஹிப்போக்ரட்டிக் உறுதிமொழிக்கு பதிலாகமகரிஷி சரக் ஷப்த்உறுதிமொழியை ஏற்க மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஆண்டுதோறும் ஜுன் 12 தேதி தொடங்கி, சர்வதேச யோகா தினமான ஜூன் 21 தேதி முடியும் வகையில் யோகா வகுப்புகள் நடத்தவும் அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மக்களவையில் பேசியிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மகரிஷி சரக் ஷபத்மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும், கட்டாயப்படுத்தப்படாது என தெரிவித்திருந்தார்.

சரக ஷபத் அல்லது சரக பிரமாணம் என்பது ஆயுர்வேத மருத்துவ முறை குறித்த சமஸ்கிருத நூலான சரக சம்ஹிதாவின் ஒரு பகுதியாகும். ஹிப்போகிரட்டிக் பிரமாணம் என்பது பண்டைய கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரடீஸால் முன்மொழியப்பட்டது. பல மருத்துவ பட்டமளிப்பு விழாக்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவத் தொழிலை நடத்துவதற்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியாகும்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்