Aran Sei

’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்காதது தொடர்பாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெகசிஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க விதி  267  ன் கீழ் அளிக்கப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்காதது குறித்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

மேலும், “புத்தகத்தில் உள்ள விதி  அடிப்படையில் ஒரு விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கூட  ஆளும் அரசு அனுமதி மறுக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே  சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, எதிர்க்கட்சியின் பிற உறுப்பினர்கள்  முக்கியமான பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்புவதை  தடுக்கிறது என்று கூறியதற்கு, மாநிலங்களவையின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆனந்த் சர்மா ஆளும் கட்சி புத்தகத்தில் உள்ள விதியின் அடிப்படையில் விவகாரங்களை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்

இந்தக் கடிதம் குறித்து காங்கிரஸ் அல்லது  மல்லிகார்ஜுன கார்கே  அலுவலகத்தில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

source; THE HINDU 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்