Aran Sei

2020-ம் ஆண்டில் பெண் ஒடுக்குமுறை தொடர்பாக 80,000 வழக்குகள் – ராஜஸ்தான் அரசிற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், அம்மாநில அரசுக்கும் காவல் துறைக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 80,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மட்டும் 12,000 வழக்குகள் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான குற்றத்திற்கு ஆன்லைன் வகுப்புகளும் காரணம் – ராஜஸ்தான் காவல் கண்காணிப்பாளர்

மேலும் அந்த நோட்டீஸில், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கடமை, குற்றவாளிகள் தப்பிக்க இயலாத வகையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

பெண்கள்மீதான குற்றங்களுக்கு அம்மாநில காவல்துறை 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பித்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெண்கள் பாதுகாப்புக்காக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

‘விவசாயிகள் சோர்வடையமாட்டார்கள், 6.5 லட்சம் கிராமங்கள் உடன் நிற்கின்றன’ – ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்ககள் அம்மாநில அரசு பொறுப்பற்ற தன்மையோடு செயல்படுகிறதோ என தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

source:PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்