கொத்தடிமைகளாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கு உடனடியாக உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் – கவுஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு
மேலும், இந்த வழிகாட்டுதல்களில், முறைசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பு உரிமைகள், கொத்தடிமைகளாக உள்ள தொழிலாளர்களை விடுவித்தல் மற்றும் மறுவாழ்வு, விளிம்பு நிலையில் உள்ளவர்களின் மனநலம் ஆகியவைக் குறித்து இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்தக் கடிதத்தைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் – சென்னை போர்டு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
மேலும், இதுகுறித்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவும், 4 வாரங்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவ்டிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனநலன் குறித்து வெளியிட்டுள்ள 10 கருதுகோள்களில், மனநல சுகாதாரத்திற்கான அணுகல், தகவல்களைப் பரப்புதல், விழிப்புணர்வு, குறைகளுக்குத் தீர்வு மற்றும் மறுஆய்வு வாரியம், மனநல ஆதரவை விரிவுபடுத்துதல், சிறப்புக் குழுக்களுக்கான ஆதரவு, தற்கொலை தடுப்பு, சுகாதார காப்பீடு, ஆராய்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் ஊடக செய்தி வெளியீட்டு உணர்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொத்தடிமைகளாக உள்ள தொழிலாளர்கள் கொரோனா இரண்டாம் அலையில் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் எல்லாவித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறியுள்ளது.
இதே போன்று, புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்து, வேலைவாய்ப்பு, சமூக-பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிபடுத்த வேண்டுமெனவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.