Aran Sei

விவசாயிகளின் தொடர் போராட்டம் : முடங்கியது டெல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து

credits : the new indian express

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி விவசாயிகள் கடந்த 30 நாட்களாக டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு போராடும் விவசாயிகளுடன் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்புக்கும் இடையே சுமூகமான முடிவு எடுக்கப்படவில்லை.

விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உணவு விடுதியை முற்றுகையிட்ட விவசாயிகள் : பின் கதவு வழியாகத் தப்பித்துச் சென்ற பாஜக தலைவர்கள்

மேலும், பெரும்பாண்மயான விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய அவர், எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு எதையும் செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

பிரதமரின் கருத்துக்கு பதிலளித்த விவசாயிகள், கடந்த 30 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒரு முறை கூட நேரில் வந்து சந்திக்காத பிரதமருக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். பிரதமர் பேசியது அனைத்தும் சித்தரிக்கப்பட்ட போலியான செய்திகள் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் தின போஸ்டர் – எதிர்ப்பு வலுத்ததால் திரும்பப் பெற்ற பாஜக

இந்நிலையில் டெல்லி காசியாபாத் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை (NH-9 & NH-24) முடக்கியுள்ளனர்.

இதையடுத்து டெல்லியின் போக்குவரத்து காவல்துறை, விவசாயிகளின் போராட்டத்தால் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் (NH-9 & NH-24) முடக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் காசியாபாத் செல்லும் மக்கள் மாற்று வழியில் செல்லுமாறு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்