Aran Sei

தேசிய விருதுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் – தமிழ்ஸ்டுடியோ அருண்

67 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறன.

66 வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பின்போது பெருமளவு தமிழ் படங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக திரைஆர்வலர்களால் கருதப்பட்ட நிலையில் இந்த வருடம் தமிழ் திரைப்பட உலகம் 7 தேசிய விருதுகளை வென்றிருக்கிறது.

‘800 படத்தின் அரசியலில் உடன்படாததால் நடிக்க மறுத்துவிட்டேன்’- நடிகர் டீஜே

தென்னிந்தியா திரையுலகம் கணிசமான அளவில் இந்தாண்டு விருதுகளை வென்றிருக்கிறது. குறிப்பாகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்தில் நடித்ததிற்காக நடிகர் தனுஷும் , போன்ஸ்லே படத்துக்காக மனோஜ் பாஜ்பாய்யும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே ஆடுகளம் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷ்க்கு வழங்கப்பட்டிருந்தது. இது அவர் பெறும் இரண்டாவது தேசிய விருதாகும் .

சிறந்த பாடலை இசையமைத்தற்காக இமானும், கே டி என்கிற கருப்பு துரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த சிறார் நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

OTT காலத்தின் கட்டாயம் – இயக்குனர் விருமாண்டி

67 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் படத்துக்கான விருது அசுரன் திரைப்படத்திற்கும் , சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படமாக ஒத்த செருப்பு படமும் , அந்தப் படத்தில் ஒலிப்பதிவு செய்த ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவிற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.

ரசூல் பூக்குட்டிக்கு 2009 ஆம் ஆண்டு ஒலிக்கலவை பிரிவில் ஆஸ்கார் விருதுப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதுகள் வழங்கப்பட்டவை குறித்து அரண்செய்யிடம் பேசிய தமிழ்ஸ்டுடியோ அருண், “முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய விருதின் தன்மை என்பது வெகுஜன தன்மை அல்லாத பிராந்திய மொழி திரை படங்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டன. ஆனால் தற்போது விருதுகள் என்பது தனக்கு எவ்வளவு அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விருது வழங்கப்பட்ட கலைஞர் பலர் பாஜகவிற்கு ஆதரவானவர்கள் அல்லது வாய்திறக்காதவர்கள் என்றுதான் புரிந்து கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும், “ இப்போது வழங்கப்பெற்ற விருதுகள் பல விமர்சனத்திற்குறியவை. இளையராஜா, ரகுமானும் இருவரும் அவர்களின் திறமைக்கு ஏற்பதான் இந்தியாவில் விருது பெற்றிருக்கிறீர்களா” என்றும் கேள்வி எழுப்பிய அவர், பாஜக அரசு, தன்னை எதிர்க்காதவர்களை மட்டும்தான் விருதுக்கு கவனத்தில் கொள்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்றும்  தமிழ்ஸ்டுடியோ அருண் அரண்செய்யிடம் கூறினார்.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்