Aran Sei

ஆர்டிஐ ஆர்வலர் கொலை மற்றும் அவரது மகனின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் – பீகார் முதலமைச்சருக்கு என்சிபிஆர்ஐ கடிதம்

Credit: The Wire

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ)  ஆர்வலர் பிபின் அகர்வால் கொலை மற்றும் அவரது 14 வயது மகனின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மக்கள் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரச்சாரம் அமைப்பு (என்சிபிஆர்ஐ) கடிதம் எழுதியுள்ளது.

ஏப்ரல் 8 தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ”பிபின் அகர்வால் ஆர்டிஐ சட்டத்த்தின் வழியாக நில ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்களை பெற்று வந்துள்ளார். இதற்காக 2020 ஆண்டு அவர் தாக்குதலுக்குள்ளானார். இதனால், அவர் காவல்துறை பாதுகாப்பு கோரியிருந்தார். இந்நிலையில், 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டிய சாமியாரை கைது செய்யுங்கள் – அகில இந்திய மாணவர் கழகம் போராட்டம்

மேலும், “பிபினின் கொலைக்கான நீதிக்காக அவரது குடும்பம் போராடி வருகிறது. கொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது மூத்த மகன் முயன்று வந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவரது 14 வயது மகன் மனமுடைந்து பீகாரின் கிழக்கு சம்பிரான் மாவட்டத்தின் மோதிஹர் பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணத்திற்கு பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

யுஜிசியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – சைபர் கிரைம் காவல்துறை விசாரணை

பிபின் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க தவறியதிலும், அவரது மரணத்திற்கு பிறகு உரிய காலக்கெடுவிற்குள் விசாரித்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய தவறியதிலும் காவல்துறையினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று என்சிபிஆர்ஐ தெரிவித்துள்ளது.

Source: The Wire

மொழிக்கலவரத்தை தூண்டும் எஸ்.சி.,மதுகூர் ராமலிங்கம் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்