Aran Sei

பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு – தலைவர்கள் அஞ்சலி

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்.நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விவசாயிகள் போராட்டம்: உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு,குறு, நிலமற்ற விசாயிகள் – ஆய்வில் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தனது வாதத்தால் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தவர். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிபிஐ தரப்புசிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்காக ஆஜராகி வாதிட்டவர் மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்   மு.கருணாநிதிக்காக பல்வேறு வழக்குகளில் ஆஜார் ஆகி இருந்தார்.

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன் இறப்பிற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்