Aran Sei

‘இது நீண்ட பயணமாதலால் போராட்டத்தை அன்றாட பழக்கமாக்குங்கள்’ – நரேஷ் திகாய்த்

காசிப்பூரில் பாரதிய கிசான் யூனியனின் சார்பாக நடைபெற்ற விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் நரேஷ் திகாய்த், பாஜகவும் மத்திய அரசும் நம்பத்தன்மையற்றவை என்று விமர்சித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், “நாம் நீண்ட பயணத்திற்கு தயாராகி வருகிறோம். இப்போராட்டத்தை உங்கள் (விவசாயிகள்) அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் போன்று பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முன்வர வேண்டும்.” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

போராட்ட களத்தில் வீடுகட்டிய விவசாயிகள் – சட்ட விரோதமென காவல்துறை வழக்குப் பதிவு

“சத்ய பால் மாலிக் விவசாயிகளுக்கும் அரசிற்கும் இடையில் இடைத்தரகராக செயல்பட்டால், நாங்கள் கவலைப்பட மாட்டோம். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர், அதன் காரணமாக, விவசாயத்தையும் இப்பிராந்தியத்தையும் புரிந்துகொள்கிறார்.” என்று நரேஷ் திகாய்த் சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லி எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளில், விவசாயிகள் நிரந்தர வீடுகளைக் கட்டிவருவது குறித்து அவர் கூறுகையில்,  “சாலைகளைக் கைப்பற்றுவதல்ல எங்கள் வேலை. நாங்கள் அதற்கு இங்கு வரவில்லை. ஆனால், விவசாயிகள் கோடையில் இங்கு வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரம், உள்ளூர் மக்களுக்கும் எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்