டாக்டர்.நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு விசாரணையின் போது ஆஜரான சாட்சியான டாக்டர்.வாசுதேவ் பர்லிகர் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, பகுத்தறிவு சிந்தனையாளரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர்.நரேந்திர தபோல்கர், புனேயில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நரேந்திர தபோல்கருடன் தொடர்புடைய மனநல மருத்துவரான டாக்டர்.வாசுதேவ் பர்லிகர், வியாழக்கிழமை (மார்ச் 3), சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு மற்றும் எதிர்தரப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பிரகாஷ் சூர்யவன்ஷி கூறியுள்ளார்.
மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்
சம்பவம் நடந்த அன்று தான் சூர்யா மருத்துவமனையில் இருந்ததாகவும் நரேந்திர தபோல்கரின் மரணம் குறித்த செய்தி காலை 8.30 மணிக்கு தனக்கு வந்ததாகவும் வாசுதேவ் பார்லிகர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் சஸ்சூன் மருத்துவமனையை அடைந்ததாகவும், அங்கு காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் அவர் விசாரணை சாட்சியாக ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாசுதேவ் பார்லிகர், நரேந்திர தபோல்கரின் உடலில் உள்ள காயங்களை அடையாளங்காட்டியதாக கூறியுள்ளார்.
மார்ச் 11ஆம் தேதி அன்று விசாரணை தொடர உள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.