Aran Sei

தபோல்கர் கொலை வழக்கு – கொலை செய்தவர்களை அடையாளம் காட்டிய சாட்சி

டாக்டர்.நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை, வழக்கு விசாரணையை மேற்பார்வையிடும் புனே நீதிமன்றத்தில் நேரில் கண்ட சாட்சி ஒருவர் அடையாளம் காண்பித்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

புனே மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் கிரண் காம்ப்ளே என்பவர் ஷரத் கலஸ்கர், சச்சின் அன்டுரே ஆகியோரை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“தனது வேலையை முடித்துவிட்டு, சாலையின் நடுவில் உள்ள ஒரு டிவைடரில் கிரண் காம்ப்ளே அமர்ந்திருந்தார். அப்போது பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தபோது, ​​இரண்டு பேர் ஒரு நபரை துப்பாக்கியால் சுடுவதைக் கண்டுள்ளார்” என்று பிரகாஷ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு – சிபிஐ நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் சாட்சிகள்

“அந்த இரண்டு பேரும் அவர் (கிரண் காம்ப்ளே) அமர்ந்திருந்த திசையில் அவரைத் தாண்டி ஓடியுள்ளனர். அவர்களுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த காவல்நிலையத்திற்கு அருகே வந்து, வண்டியை கிளப்பி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர், காம்ப்ளே சத்தம் வந்த இடத்திற்கு போய் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 23ஆம் தேதி, இவ்வழக்கின் குறுக்கு விசாரணை தொடரும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் சூர்யவன்ஷி குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, பகுத்தறிவு சிந்தனையாளரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர்.நரேந்திர தபோல்கர், மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

மதத்தின் தன்மை என்ன? – பகத்சிங், நரேந்திர தபோல்கர் இணையும் புள்ளிகள்

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய மும்பை நீதிமன்றம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்