Aran Sei

மதக்கலவரத்தை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தடை செய்ய வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்திய நாராயணசாமி

தக்கலவரத்தை தூண்டும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” போன்ற படங்களை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காணொளி ஒன்றில் பேசிய அவர், நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது அதிர்ச்சியாக உள்ளது. உண்மையிலேயே பிரதமர் மோடி இந்த நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் பஞ்சாப்பில் பாஜக ஏன் படுதோல்வி அடைந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற மதக்கலவரத்தை தூண்டுகின்ற படத்தை புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர். இந்த படத்தின் மீது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு என்ன இவ்வளவு அக்கறை. இதிலிருந்து ஆளுநர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அரசின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சென்று பார்க்கும்போது, மதக்கலவரத்தை தூண்டுவதற்கு உதாரணமாகவும், காரணமாகவும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழும். எனவே இந்த படத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்