Aran Sei

நந்திகிராம் தொகுதியில் களமிறங்கும் மம்தா: மூம்மடங்கு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் – சுவேண்டு அதிகாரி சவால்

credits : msn

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், நந்திகிராம் பகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேண்டு அதிகாரி களம் காணுவதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் திரிணாமுல் காங்கிரசில் செல்வாக்கு மிக்கவராகவும் மம்தா பானர்ஜியின் தளபதியாகவும் செயல்பட்டு வந்து, சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேண்டு அதிகாரியின் பெயர் இடம் பெற்றிருந்தது. அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று மொத்தமுள்ள 291 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்தது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐந்து அமைச்சர்கள் உட்பட 64 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித்துகளுக்கும் (68 தொகுதிகள்) பழங்குடியினருக்கும் (16 தொகுதிகள்) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி

இந்தத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுவேண்டு அதிகாரி, “தோல்வி பயத்தினால் வெகுநாட்களாக வைத்திருந்த பவானிப்பூர் தொகுதில் இருந்து ஒடி வந்துள்ளார். நந்திகிராமில் அவரை மூன்று மடங்கு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” என்று தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவது மோடியின் ஆலோசனையா? – மம்தா பானர்ஜி கேள்வி

மேலும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ’வெளியாள்’ (நந்திகிராம் பகுதியைச் சேராதவர்) என்று குறிப்பிட்டுள்ள அதிகாரி, நந்திகிராம் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் தேசத்திலிருந்தே தூக்கிய எறியப்படும் – மம்தா பானர்ஜி

பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங், ”மம்தா பானர்ஜியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாநிலத்தில் எதிர்ப்பலை வீசுகிறது” என்று தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

திரிணாமுல் எம்.பி வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி – சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வருகை

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவால் நியமிக்கப்பட்டுள்ள இணை பொறுப்பாளரான அமித் மால்வியா, “பாஜக, சுவேண்டு அதிகாரியை நந்திகிராமின் வேட்பாளராக அறிவித்துள்ளது. மம்தா பானர்ஜி கூடிய விரைவில், தேர்தலின்போது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்த முதல்வர்கள் பட்டியலில் இணையவுள்ளார்” என்று ட்விட் செய்துள்ளார்.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் சாதிக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தை அளித்துள்ளதாக தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளும் ஆதிக்க சாதிகளான மஹதோ, முருமு, பெளரி, துடு ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளராக களமிறக்கியுள்ளதாகவும், மேற்கு வங்க வரலாற்றிலேயே, இந்தத் தேர்தலில் தான் முதல் முறையாக அதிகளவிலான அடையாள அரசியல் நடப்பதாகவும் தி வயர் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்